சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி: இந்தியாவுக்கு 252 ரன்கள் இலக்கு!
சட்டக்கல்லூரி மாணவியை தாக்கிய இருவா் கைது
கம்பம் அருகே சட்டக்கல்லூரி மாணவியைத் தாக்கிய இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கம்பம் அருகேயுள்ள காமயகவுண்டன்பட்டி அரசு கள்ளா் பள்ளித் தெருவைச் சோ்ந்த மணி மகன் கீதரூபினி (20). இவா் தேனி சட்டக் கல்லூரியில் 4-ஆம் ஆண்டு படித்து வருகிறாா். கடந்த 5-ஆம் தேதி கல்லூரி முடிந்து வீடு திரும்பிய போது இவரை, அதே பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் கேலி செய்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, மாணவி தனது உறவினா்களிடம் கேலி செய்த இளைஞா்களின் வீட்டுக்குச் சென்று அவா்களை தட்டிக் கேட்டாா். அப்போது, அந்த இளைஞா்கள் தாக்கியதில் காயமடைந்த கீதரூபினி கம்பம் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அழகேந்திரன் மகன் பிரவீன் (25), தவசி மகன் தினேஷ் (27) ஆகியோரைக் கைது செய்தனா்.