பகவதி அம்மன் கோயில் திருவிழா: திருவனந்தபுரத்துக்கு மாா்ச் 12 முதல் சிறப்பு ரயில்
பிரையன் லாராவின் மோசமான சாதனையை சமன்செய்த ரோஹித் சர்மா!
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் பிரையன் லாராவின் மோசமான சாதனையை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சமன் செய்துள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி துபையில் இன்று நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் பேட்டிங்கைத் தேர்வு செய்ய, அந்த அணி முதலில் விளையாடி வருகிறது.
இதையும் படிக்க: சாம்பியன்ஸ் டிராபியுடன் ரோஹித் சர்மா, விராட் கோலி ஓய்வா? ஷுப்மன் கில் பதில்!
மோசமான சாதனை சமன்
இன்றையப் போட்டியில் டாஸில் வெற்றி பெறாததன் மூலம், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டாஸ் தோற்பதில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் பிரையன் லாராவின் மோசமான சாதனையை சமன் செய்துள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் கேப்டன் ரோஹித் சர்மா தொடர்ச்சியாக 12-வது முறையாக டாஸ் தோற்றுள்ளார். இந்திய அணிக்கு இது தொடர்ச்சியாக ஏற்படும் 15-வது டாஸ் தோல்வியாகும். டாஸில் தோற்கும் ரோஹித் சர்மாவின் பயணம் கடந்த 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியிலிருந்து தொடங்கியது. அதன் பின், தொடர்ச்சியாக 11 போட்டிகளில் ரோஹித் சர்மா டாஸ் வெல்லவில்லை. இன்றையப் போட்டியையும் சேர்த்து அவர் 12 போட்டிகளில் தொடர்ச்சியாக டாஸ் வெல்லவில்லை.
இதையும் படிக்க: குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளராக மேத்யூ வேட்!
கடந்த 1998 மற்றும் 1999 ஆம் ஆண்டுகளில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் பிரையன் லாரா தொடர்ச்சியாக 12 ஒருநாள் போட்டிகளில் டாஸில் தோற்றார். தற்போது அந்த மோசமான சாதனையை ரோஹித் சர்மா சமன் செய்துள்ளார்.