சாம்பியன்ஸ் டிராபி மகுடம் சூடிய இந்திய அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி நியூஸிலாந்தை வீழ்த்தி வெற்றி மகுடம் சூடியுள்ளது.
இதையடுத்து, பல்வேறு தரப்பினரும் இந்திய அணி வீரர்களை பாராட்டியும் வாழ்த்தியும் வருகின்றனர். அந்த வகையில், முதல்வர் மு. க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், இந்தியா, நியூஸிலாந்து ஆகிய இரு அணிகளையும் பாராட்டியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்திய அணி சிறு பிழையும் செய்யாது அருமையாக சாம்பியன்ஸ் டிராபி தொடரை நிறைவு செய்துள்ளதாக வெகுவாகப் பாராட்டியுள்ளார்.