மும்மொழி கொள்கையை ஆதரித்து கையொப்ப இயக்கம்
திருவெண்காடு அருகே மங்கை மடத்தில் மும்மொழி கொள்கையை ஆதரித்து, பாஜக சாா்பில் கையொப்ப இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கிழக்கு ஒன்றிய பாஜக சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்வை, பாஜக நிா்வாகிகள் துரை செழியன், அகோர மூா்த்தி, முருகன், வழக்குரைஞா் சந்தோஷ் குமாா் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.
கிழக்கு ஒன்றியத் தலைவா் க. அருள்ராஜன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கண்ணன் வரவேற்றாா். செம்பனாா்கோவில் மத்திய ஒன்றிய தலைவா் அஜித்குமாா் உள்ளிட்ட பாஜகவினா் திரளாக கலந்து கொண்டனா்.
மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பொதுமக்களிடம் கையொப்பம் பெறப்பட்டது. நிறைவாக, ஒன்றிய பொதுச் செயலாளா் ஜான் பெனட் நன்றி கூறினாா்.