செய்திகள் :

நான் இசை தெய்வமல்ல, சாதாரண மனிதன்தான்: இளையராஜா

post image

ரசிகர்கள் என்னை இசை தெய்வம் என அழைக்கின்றனர், ஆனால் நான் சாதாரண மனிதன்தான் என்று இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், உங்களின் ஆதரவு, வரவேற்புடன் சேர்த்து எனது வெற்றிக்கு இறைவன் அருள்புரிந்தான். முறையாக ஒத்திகை பார்த்து பின்னர் சிம்ஃபனி இசையை அரங்கேற்றினேன். ஒவ்வொரு தருணத்திலும் ரசிகர்கள் கைதட்டியதால் இசை கோர்ப்பாளரே ஆச்சரியமடைந்தார். தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள நிகழ்ச்சி.

அரசு மரியாதையுடன் முதல்வர் என்னை வரவேற்றது மனம் நெகிழச் செய்தது. சிம்ஃபனியின் இரண்டாவது பிரிவில் எனது பாடல்களையும் வாசித்து, அதில் நானும் பாடினேன். எனது சிம்ஃபனி இசை துபை, பாரிஸ் உள்ளிட்ட 13 நாடுகளில் நடக்கவுள்ளது. ரசிகர்கள் என்னை இசை தெய்வம் என அழைக்கின்றனர். நான் சாதாரண மனிதன்தான். பண்ணைபுரத்தில் இருந்து இன்றுவரை எனது கால்களில் நடந்து, எனது கால்களில்தான் நான் நிற்கிறேன்.

82 வயது ஆகிவிட்டதே என நினைக்க வேண்டாம், இனிமேல்தான் ஆரம்பிக்கப் போகிறேன். இவ்வாறு அவர் கூறினார். லண்டனில் தனது முதல் சிம்ஃபனி அரங்கேற்றத்துக்பின் திங்கள்கிழமை சென்னை திரும்பிய இசைஞானி இளையராஜாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் இளையராஜாவை தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு வரவேற்றார். பாஜக சார்பில் கரு.நாகராஜன், விசிக சார்பில் வன்னியரசு உள்ளிட்டோர் இளையராஜாவை வரவேற்றனர்.

இசைஞானி இளையராஜாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வரவேற்பு

அரசியல் கட்சியினர் மட்டுமின்றி, திரைத்துறையினரும், ரசிகர்களும் இளையராஜாவுக்கு வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி இந்திய நாட்டிற்கே பெருமை சேர்த்துள்ளார் இளையராஜா. முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் அவரை வரவேற்க வந்திருக்கிறேன். மிகப் பெரிய உலக சாதனையை நிகழ்த்தி தாய் மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளார் இளையராஜா என்றார்.

உலகின் மிகச் சிறந்த பில்ஹார்மோனிக் இசைக் குழுவுடன் இணைந்து இளையராஜா சிம்ஃபனியை அரங்கேற்றினார். இதன்மூலம் சிம்ஃபனி இசையை அரங்கேற்றம் செய்த முதல் இந்தியர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரானார் இளையராஜா.

தூத்துக்குடி, திருச்சிக்கு கூடுதல் விமான சேவைகள்!

சென்னையில் இருந்து தூத்துக்குடி, திருச்சி விமான நிலையங்களுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படும் என்று விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து தூத்துக்கு... மேலும் பார்க்க

மார்ச் 12-ல் தஞ்சாவூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

மாசி மகத்தை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்துக்கு நாளை மறுநாள்(மார்ச் 12) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பார்க்க

கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹுசைனியை பாதித்திருக்கும் புற்றுநோய் என்ன?

கராத்தே மாஸ்டர் என்று அறியப்படும் ஷிகான் ஹுசைனியை ரத்தப் புற்றுநோய் பாதித்திருப்பதாகவும், அவரது வாழ்நாள்கள் எண்ணப்பட்டு வருவதாகவும் நேர்காணல் ஒன்றில் அவர் பகிர்ந்துகொண்டுள்ளார்.அவரை பாதித்திருக்கும் ப... மேலும் பார்க்க

வாணியம்பாடி அருகே இருசக்கர வாகனம்-கார் மோதல்: இருவர் பலி!

வாணியம்பாடி அருகே இருசக்கர வாகனம் மீது பின்னால் வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற காரை போலீஸார் ... மேலும் பார்க்க

பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளை விஜய் விமர்சிப்பதில்லை: சு. திருநாவுக்கரசர்

பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளை விஜய் விமர்சிப்பதில்லை என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சு. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் திருச்சியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், க... மேலும் பார்க்க

தமிழகத்தை பழிவாங்கும் மத்திய அரசு: மக்களவையில் திமுக எம்பிக்கள் பேச்சு

ஒரு மாநிலத்துக்கு ஒதுக்க வேண்டிய கல்வி நிதியை, மாணவர்களின் கல்விக்காக செலவிட வேண்டிய தொகையை, அந்த மாநிலத்தைப் பழிவாங்குவதற்காக நிறுத்திவைத்து, பழிவாங்கும் கருவியாகப் பயன்படுத்துவது சரியானதா என்று திமு... மேலும் பார்க்க