செய்திகள் :

Ice Cube For Face: ஐஸ் கட்டி மசாஜ் செய்தால் முகம் பொலிவு பெறுமா? அழகியல் மருத்துவர் சொல்வெதன்ன?

post image

செலிப்ரிட்டி முதல் இன்ஃப்ளூயன்சர் வரை ஸ்கின் கேர் குறித்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக இந்த ஐஸ் க்யூப் ஸ்கின் கேர் குறித்த வீடியோக்கள் அதிகம் பகிரப்பட்ட வருகிறது. நடிகை வரலட்சுமி கூட அவரது இன்ஸ்டா ஸ்டோரியில் ஐஸ் பாத் சேலஞ்ச் என்று பதிவிட்டு இருந்தார்.

உண்மையிலேயே இந்த ஐஸ் பாத் சேலஞ்ச் முகத்திற்கு பொலிவை உண்டாக்குகிறதா? இதனால் கிடைக்கும் நன்மை என்ன? என்று இங்கு தெரிந்துக்கொள்வோம்.

ஒரு பௌலில் ஐஸ் கியூப்களை நிரப்பி அதில் தங்களின் முகங்களை 10 முதல் 15 நிமிடம் வரை வைக்கிறார்கள். இதனால் அவர்களுக்கு இரத்த ஓட்டம் மேம்பட்டு முகப் பொலிவு ஏற்படுகிறது. ஆனால் தினமும் இவ்வாறு செய்வதால் முகத்திற்கு பொலிவு உண்டாக்குமா என்று கேட்டால் இல்லை என்கிறார் தோல் மற்றும் அழகியல் மருத்துவர் டாக்டர் கோல்டா ராகுல்.

ஐஸ் கட்டிகளை ஒரு துணியில் சுற்றி முகத்தில் மசாஜ் செய்யலாமே தவிர, இவ்வாறு முகம் முழுவதையும் ஐஸ் கட்டிகளில் முக்கி வைப்பதால் சிவந்த தோல் உண்டாக்கும், அந்த சமயத்திற்கு முகம் பொலிவாகத் தெரியுமே தவிர இது ஒரு நிரந்தர தீர்வு இல்லை என்கிறார் மருத்துவர் கோல்டா.

ஐஸ் கட்டிகள் கொண்டு மசாஜ் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து தோல் மற்றும் அழகியல் மருத்துவர் Dr.கோல்டா விகடனுக்குப் பகிர்ந்துள்ளார்.

``அதில் ஐஸ் கட்டிகளை முகத்திற்குப் பயன்படுத்துவதால் ரத்த ஓட்டம் மேம்பட்டு முகம் தற்காலிகப் பொலிவுபெறும். முகத்தில் இருக்கும் போர்ஸை எல்லாம் தற்காலிகமாக இறுகச் செய்யும்.

கண்களைச் சுற்றியிருக்கும் வீக்கத்தை அந்த சமயத்திற்குக் குறையும்.

முகப்பருவால் ஏற்படும் எரிச்சலை இந்த ஐஸ்கட்டி மசாஜ் குறைக்கும்.

ஆனால் இதனை தினமும் செய்ய வேண்டாம்" என்கிறார் மருத்துவர் கோல்டா ராகுல்.

Beauty: பிம்பிள்கள் ஏன் வருகின்றன? சிம்பிளான இயற்கை தீர்வுகள் இதோ!

பருக்கள் ஏன் வருகின்றன?சமச்சீரற்ற ஹார்மோன்கள், அதிகமான எண்ணெய் உணவுகளைச் சாப்பிடுதல், அதிகளவில் மருந்துகளை உட்கொள்ளுதல், மனப் பிரச்னைகள், சுற்றுச்சூழல் பாதிப்பு, சரியான பராமரிப்பின்மை, பொடுகுத்தொல்லை,... மேலும் பார்க்க

Beauty: பாட்டி வைத்தியம் முதல் பியூட்டி பார்லர் வரை... இயற்கை அழகி முல்தானி மட்டி!

முல்தானிமட்டியைக் குழைச்சு முகத்தில் பூசினால், பளிச்னு இருக்கும்’ என, பாட்டி வைத்தியத்தில் தொடங்கி பியூட்டி பார்லர் வரை முல்தானி மட்டிக்கு செம மவுசு! 'முல்தானிமட்டினா என்ன?’ என்று யாரிடமாவது கேளுங்கள்... மேலும் பார்க்க

Helmet Hygiene: ஹெல்மெட்டை தலைமுடிக்கு ஃப்ரெண்டாக்க 5 டிப்ஸ்!

இன்று இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் பலரும் எதிர்கொள்ளும் பிரச்னைகளில் ஓன்று, ஹெல்மெட் அணிவதால் ஏற்படும் கேசப் பிரச்னை. வேர்ப்பகுதியில் ஏற்படும் பாதிப்பில் ஆரம்பித்து, கேச உதிர்வு, வறண்ட கேசம் என இதனால்... மேலும் பார்க்க

Curd: வயிறு, முகம், தலைமுடி... மூன்றுக்கும் ஃப்ரெண்ட் தயிர்!

தயிர்... உயிர் காக்கும் ஆரோக்கியக் கூறுகள் அடங்கிய உணவுப்பொருள். புரோபயாடிக் நிறைந்த தயிரில் துத்தநாகம், வைட்டமின் இ, பாஸ்பரஸ் ஆகியவை இருக்கின்றன. கெட்டித் தயிரைச் சாப்பிட்டால் ஆயுள் கெட்டிதான். எப்பட... மேலும் பார்க்க

Herbal Hair Care: முடி வளர்ச்சிக்கு 4 மூலிகைத் தைலம்!

ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி முடி உதிர்வு என்பது தலையாயப் பிரச்னையாக இருக்கிறது. எத்தனையோ இறக்குமதி தைலங்களைத் தேய்த்தாலும் உறுதியான முடியைப் பெறமுடியவில்லை. ஆரம்பத்தில், இத்தகைய தைலங்களைப் பயன்... மேலும் பார்க்க