செய்திகள் :

தமிழைவிட சமஸ்கிருதமே பழமையான மொழி: மக்களவையில் பாஜக எம்பி

post image

தமிழைவிட சமஸ்கிருதமே பழமையான மொழி என்று மக்களவையில் பாஜக எம்பி நிஷிகாந்த் துபே திங்கள்கிழமை பேசியுள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று காலை தொடங்கிய நிலையில், தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்று தமிழக எம்பிக்கள் தெரிவித்திருந்தனர்.

இதற்கு பதிலளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், “சூப்பர் முதல்வர் ஒருவரின் பேச்சைக் கேட்டு தமிழக அரசு கையெழுத்திட மறுப்பு தெரிவிக்கிறது” என்றார்.

மேலும், தர்மேந்திர பிரதானின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்க : யார் அந்த சூப்பர் முதல்வர்?

இந்த நிலையில், தேசிய கல்விக் கொள்கை பற்றி பேசிய ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்பி நிஷிகாந்த் துபே சமஸ்கிருதம்தான் பழமையான மொழி என்று தெரிவித்துள்ளார்.

அவர் பேசியதாவது:

”திமுக அரசு எப்போதும் தமிழ் மிகவும் பழமையான மொழி என்கிறார்கள். ஆனால், சமஸ்கிருதம் என்பது அதனைவிட பழமையான மொழி. கர்நாடகம், தெலங்கானா, தமிழகம் உள்பட நாடு முழுவதும் அனைத்து கோயில்களிலும் வழிபாட்டு மொழி சமஸ்கிருதம்தான்.

தேர்தலுக்காக கல்விக் கொள்கையை எதிர்க்கிறார்கள். தொகுதி மறுசீரமைப்பு பற்றி பேசுகிறார்கள். திமுக என்பது காங்கிரஸுடன் இணைந்து இயங்கிக் கொண்டிருக்கிறது.

நாட்டின் அடிப்படையையே தகர்ப்பதற்கு திமுக விரும்புகிறது. ஆங்கிலத்தை புகுத்த முயற்சிக்கிறார்கள். மக்களை அவர்கள் தூண்டிவிடப் பார்க்கிறார்கள். இது ஏற்றுக் கொள்ளதக்கது அல்ல, உடனடியாக இதனை தடுத்து நிறுத்த வேண்டும்” என்றார்.

சோப்பு விலையை உயர்த்தும் முன்னணி நிறுவனங்கள்!

சோப்பு விலையை உயர்த்த முன்னணி சோப்பு தயாரிப்பு நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளில் பாமாயில் தயாரிப்பு சரிவைச் சந்தித்துள்ள நிலையில், பாமாயில் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற... மேலும் பார்க்க

பிகார் நகைக் கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை! ரூ.2 கோடியா, ரூ.25 கோடியா?

பிகார் மாநிலம் போஜ்புர் மாவட்டம் கோபாலி சௌக் பகுதியில் இயங்கி வரும் மிகப் பிரபலமான நகைக் கடைக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த கொள்ளையர்கள் கோடிக்கணக்கான மதிப்புள்ள தங்க, வைர நகைகளைக் கொள்ளையடித்துள்ளனர்.... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம் 2047-க்குள் வளர்ந்த இந்தியா கனவை நனவாக்கும்: அஜித் பவார்

பிரதமரின் வளர்ந்த இந்தியா என்ற கனவை நனவாக்குவதில் மாநிலம் முன்னணிப் பங்காற்றத் தயாராக உள்ளதாக மகாராஷ்டிரம் துணை முதல்வர் அஜித் பவார் கூறினார். மகாராஷ்டிர மாநிலத்தில் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட் இன... மேலும் பார்க்க

ஸோஹோவின் இ-ஸ்கூட்டர்.. அறிமுக விலை இவ்வளவுதானா? தள்ளுபடியுமா?

ஸோஹோவின் அல்ட்ராவயலட் நிறுவனத்தின் முதல் இ-ஸ்கூட்டருக்கான முன்பதிவுகள் குவிந்து வருகிறது. அதனால், தள்ளுபடியையும் நிறுவனம் அதிரடியாக அறிவித்து வருகிறது.தகவல்தொழில்நுட்பத் துறையில் கோலோச்சி வரும் ஸோஹோ ந... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு கணிதத் தேர்வு வினாத்தாள் எப்படி இருந்தது?

நாடு முழுவதும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, நடப்பு கல்வியாண்டில் 10ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வில் இன்று கணிதப் பாடத் தேர்வு நடைபெற்றது.நாட... மேலும் பார்க்க

'ஹோலி பண்டிகையன்று முஸ்லீம்கள் வீட்டிற்குள்ளேயே இருங்கள்' - பாஜக எம்எல்ஏ சர்ச்சைப் பேச்சு!

ஹோலி பண்டிகையன்று முஸ்லீம்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்று பிகார் பாஜக எம்எல்ஏ ஒருவர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிகார் மாநிலம் மதுபானி மாவட்டம் பிஸ்ஃபி தொகுதி எம்எல்ஏ ஹரிபூ... மேலும் பார்க்க