பிரித்தாளும் அரசியல் பிடிக்கவில்லை: பாஜக எம்எல்ஏ திரிணமூல் காங். கட்சியில் ஐக்கி...
டெஸ்ட் படத்தின் முதல் பாடல்!
டெஸ்ட் படத்தின் முதல் பாடல் இணையத்தில் வெளியாகியுள்ளது.
மண்டேலா திரைப்படத்தின் தயாரிப்பாளாரான சஷிகாந்த் இயக்கத்தில் நடிகர்கள் மாதவன், சித்தார்த், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டெஸ்ட். ஒய்நாட் ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.
கிரிக்கெட்டை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. சித்தார்த் கிரிக்கெட் வீரராகவும் மாதவன் மற்றும் நயன்தாரா பிரதான பாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
இதையும் படிக்க: பூஜையுடன் தொடங்கியது சர்தார் 2 பட டப்பிங் பணிகள்!
டெஸ்ட் திரைப்படம் வருகிற ஏப். 4 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகவுள்ளது. பாடகி சக்தி ஸ்ரீ கோபாலன் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
இந்த நிலையில், டெஸ்ட் படத்தின் முதல் பாடலான ‘அரேனா’ பாடல் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.