செய்திகள் :

எஸ்.பி.வேலுமணி வீட்டு விசேஷம் : சந்தித்துக்கொள்ளாத செங்கோட்டையன் - எடப்பாடி!

post image

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மகன் விஜய் விகாஷ் – தீக்‌ஷனா தம்பதிக்கு கடந்த மார்ச் 3-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க நிர்வாகிகள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆனால் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளவில்லை. வேலுமணி பா.ஜ.க-வுடன் நெருக்கமாக இருப்பதால்தான் எடப்பாடி திருமண நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என்று தகவல் வெளியானது. மறுபக்கம் இந்த திருமண நிகழ்வில் எடப்பாடி பழனிசாமியின் மனைவி, மகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். எடப்பாடி பழனிசாமி திருமண வரவேற்பில் கலந்துகொள்வார் எனக் கூறப்பட்டது.

இந்த நிலையில், இன்று கொடிசியா வளாகத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில், மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், பாஜக பொருளாளர் எஸ்.ஆர். சேகர், வினோஜ் செல்வம் கலந்து கொண்டனர்.

சந்தித்துக்கொள்ளாத செங்கோட்டையன் - எடப்பாடி

அண்மை காலமாக எடப்பாடிக்கும், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் மனகசப்பு நிலவி வருவதை காண முடிகிறது. இதனால் இருவரும் பரஸ்பரம் நேருக்கு நேர் சந்திப்பதை தவிர்த்து வரும் நிலையில், இன்று இருவரும் சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், செங்கோட்டையன் மாலை 3 மணியளவில் விழா நிகழ்விடத்துக்கு வந்து, மணமக்களை வாழ்த்திவிட்டு 4 மணி விமானத்தில் சென்னை கிளம்பிவிட்டார். எடப்பாடி பழனிசாமி மாலை 6 மணியளவில்தான் வந்தார். இதன்மூலம் எடப்பாடி - செங்கோட்டையன் இடையே தொடர்ந்து மனக்கசப்பு நீடிக்கிறது என்பதாகவே பார்க்கப்படுகிறது.

இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள், பா.ஜ.க நிர்வாகிகள் சரத்குமார், ராதிகா, விஜயதாரணி, திரை பிரபலங்கள் சத்யராஜ், சிவக்குமார், ரஞ்சித் (பிக்பாஸ்), கஸ்தூரி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பா.ம.க கெளரவ தலைவர் ஜி.கே.மணி, காங்கிரஸ் முன்னாள் எம்.பி திருநாவுக்கரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

``ஸ்டார்லிங்க் நம்பகத்தன்மையற்றது என நிரூபிக்கப்பட்டால்...'' - போலந்து அமைச்சர் ராடோஸ்லாவ் பதில்!

ரஷ்யா உக்ரைன் போரின் காரணமாக உக்ரைனில் தகவல் தொடர்பு முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. இதனால் உக்ரைன் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் என்ற தொலைத்தொடர்பை தான் பயன்படுத்தி வருகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவர... மேலும் பார்க்க

`236 தொழிற்சாலைகள் அமைத்து இளைஞர்களுக்கு வேலை வழங்கியிருக்கிறோம்’ - புதுச்சேரி ஆளுநரின் பட்ஜெட் உரை

புதுச்சேரி 15-வது சட்டசபையின் 6-வது பட்ஜெட் கூட்டத்தொடர் கவர்னர் கைலாஷ்நாதன் உரையுடன் இன்று துவங்கியது. திருக்குறளுடன் துவங்கிய அவர், ஆளுநர் உரை முழுவதையும் தமிழில் வாசித்தார். அப்போது, ``அரசின் பல்வே... மேலும் பார்க்க

`தமிழைவிட சம்ஸ்கிருதம்தான் பழைமையானது; தோல்வி பயத்தில் திமுக...' - மக்களவையில் பாஜக எம்.பி பேச்சு

தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை எதிர்ப்பதன் மூலம் தி.மு.க நாட்டைப் பிளவுபடுத்த முயற்சிப்பதாக ஜார்கண்ட் பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே குற்றம்சாட்டியிருக்கிறார். இன்று ம... மேலும் பார்க்க

`நான் கனடிய மக்களை ஏமாற்றவில்லை; ஒவ்வொரு நாளும்..!'- பிரிவு உபசார விழாவில் கண்கலங்கிய ஜஸ்டின் ட்ரூடோ

இந்த ஆண்டு ஜனவரியில் அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பாக, கனடா பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக ஜஸ்டின் ட்ருடோ (Justin Trudeau) அறிவித்தார். அதைத் தொடர்ந்து புதிய பிரதம... மேலும் பார்க்க

அதிமுக : சட்டசபை கூட்டணி கணக்கை சொல்லும் மாநிலங்களவை `சீட்’ கணக்கு - தேமுதிக இனி?!

கடந்த 2019-ம் ஆண்டு ஜூலையில் தமிழ்நாட்டிலிருந்து 6 மாநிலங்களவை எம்.பி-க்கள் தேர்வாகினர். இதில் தி.மு.க-விலிருந்து வழக்கறிஞர் வில்சன், தொ.மு.ச பேரவைத் தலைவர் சண்முகம், எம்.எம் அப்துல்லா, தி.மு.க கூட்டண... மேலும் பார்க்க