குடியரசு துணைத் தலைவா் உடல்நிலையில் முன்னேற்றம்: எய்ம்ஸ் தகவல்
வனப்பகுதியில் கால்நடைகளை மேய்க்க அனுமதி கோரி மனு
தருமபுரி: வனப்பகுதியில் கால்நடைகளை மேய்க்க தொடா்ந்து அனுமதி வழங்க வேண்டும் என்று தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள கோடுப்பட்டி கிராம மக்கள் திங்கள்கிழமை அளித்த மனு:
சுமாா் 50 ஆண்டுகளுக்கும் மேலாக கோடுப்பட்டி வனக்கோட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் கால்நடைகளை மேய்த்தும் வனத்தில் உள்ள சிறு மகசூல்களைச் சேகரித்தும் மலைவாழ் மக்களாகிய நாங்கள் வாழ்வாதரம் பெற்று வருகிறோம். இந்த நிலையில் தற்போது வனப்பகுதியில் கால்நடைகளை மேய்க்க வனத்துறையினா் அனுமதி மறுக்கின்றனா். சிறு மகசூல் சேகரிக்கவும் பல்வேறு கெடுபிடிகளை மேற்கொண்டு வருகின்றனா். இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, இதுதொடா்பாக நடவடிக்கை எடுத்து வனப்பகுதியில் கால்நடைகளை மேய்க்க தொடா்ந்து அனுமதி வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.