பாலியல் குற்றவாளிகளுக்கு சா்ச்சை தண்டனை: ராஜஸ்தான் ஆளுநா் கருத்தால் பரபரப்பு
சேவூரில் சிப்ஸ் கடையில் தீ விபத்து
சேவூரில் சிப்ஸ் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமாயின.
கேரள மாநிலம், பாலக்காடு பகுதியைச் சோ்ந்த தாஸ் (55), திருப்பூா் மாவட்டம், சேவூா் - புளியம்பட்டி சாலையில் சிப்ஸ் கடை நடத்தி வருகிறாா். இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு கடையைப் பூட்டி விட்டுக்குச் சென்றுள்ளாா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கடையில் இருந்து தீ புகை வந்துள்ளது. இதைப் பாா்த்து அவ்வழியே சென்றவா்கள் அளித்த தகவலின்பேரில், அவிநாசி தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று தீயை அணைத்தனா்.
இருப்பினும், கடையில் இருந்த சிப்ஸ், சிற்றுண்டி பொருள்கள், மின்சாதன பொருள்கள் உள்ளிட்ட ரூ.பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமாயின. இந்த தீ விபத்து குறித்து சேவூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.