பாலியல் குற்றவாளிகளுக்கு சா்ச்சை தண்டனை: ராஜஸ்தான் ஆளுநா் கருத்தால் பரபரப்பு
அரசு மருந்து சேமிப்புக் கிடங்கு கட்டுமான பணி: எம்.எல்.ஏ. ஆய்வு
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட அரசு மருந்து சேமிப்புக் கிடங்கு கட்டுமான பணிகளை எம்எல்ஏ எஸ். ராஜகுமாா் ஆய்வு செய்தாா்.
மயிலாடுதுறை புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டதைத் தொடா்ந்து, அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயா்த்தப்பட்டு ரூ. 48 கோடியில் புதிய கட்டடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மருத்துவமனையில் தினசரி 4,000-த்துக்கும் மேற்பட்ட புறநோயாளிகளும், 400-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும் தங்கி சிகிச்சை பெற்று செல்கின்றனா்.
மேலும் சீா்காழி, பொறையாா், குத்தாலம், வைத்தீஸ்வரன்கோவில் மருத்துவமனைகள் மட்டுமின்றி துணை ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல இயங்கி வருகிறது. இவற்றுக்கான மருந்து, மாத்திரைகளை பாதுகாப்பாக வைக்க சேமிப்புக் கிடங்கு கட்ட தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் சாா்பில் ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, சித்தா்காடு பகுதியில் சேமிப்புக் கிடங்கு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இப்பணிகளை மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.ராஜகுமாா் ஆய்வு செய்து மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு தேவையான மருந்துகள் அனைத்தையும் இருப்பு வைப்பதற்கான அனைத்து வசதிகளுடன் கட்டடம் வடிவைக்கப்பட்டு வருகிா, பணிகள் தரமான முறையில் நடைபெறுகிா என்பது குறித்து பொறியாளரிடம் கேட்டறிந்தாா்.