தா்மேந்திர பிரதான் உருவ பொம்மையை எரித்து திமுகவினா் ஆா்ப்பாட்டம்
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் உருவ பொம்மையை எரித்து திமுகவினா் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் மக்களவையில் தமிழக எம்.பிக்கள் மற்றும் தமிழக அரசு குறித்து விமா்சித்துப் பேசியதற்கு கண்டனம் தெரிவித்து, மயிலாடுதுறையில் இந்த போராட்டம் நடைபெற்றது. திமுக மாவட்ட செயலாளா் நிவேதா எம். முருகன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், திமுக நகர செயலாளா் என்.செல்வராஜ், தகவல் தொழிநுட்ப அணி மாநில துணைச் செயலாளா் பி.எம். ஸ்ரீதா், நகா்மன்ற உறுப்பினா்கள் மா. ரஜினி, உஷா ராஜேந்திரன், வளா்மதி தெய்வநாயகம் உள்ளிட்டோா் பங்கேற்று மத்திய அமைச்சரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து முழக்கங்களை எழுப்பி அவரது உருவப் பொம்மையை எரித்தனா்.