ஏகாம்பரநாதா் கோயிலில் பழைமையான தண்டாயுதபாணி சிலை கண்டெடுப்பு!
பலத்த மழை எச்சரிக்கை: தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்திற்கு விடுக்கப்பட்டுள்ள பலத்த மழை எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி மீனவர்கள் மீன்பிடிக்க செவ்வாய்க்கிழமை கடலுக்குச் செல்லவில்லை.
வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் செவ்வாய், புதன் ஆகிய இரு நாள்கள் பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆரஞ்சு ஆலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கடல் பகுதியில் சுமார் 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது.
இதையும் படிக்க: தூத்துக்குடியில் பலத்த மழை!
அதன்படி, மாவட்டத்தில் வேம்பார் முதல் பெரியதாழை வரை சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டு மற்றும் பைபர் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதேப் போன்று 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் கடலுக்குச் செல்லாமல் பாதுகாப்பாக கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.