தொகுதி மறுசீரமைப்பு: ஜெகன் மோகனுடன் திமுக நிர்வாகிகள் சந்திப்பு!
காவலாளியைத் தாக்கிய வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டு சிறை
திருநெல்வேலி அருகே காவலாளியைத் தாக்கியது தொடா்பான வழக்கில், இளைஞருக்கு 3ஆண்டுகள் சிைண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
பாளையங்கோட்டை தாலுகா காவல் சரகம் மேலப்பாட்டம், பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் முத்துசாமி (45). தனியாா் நிறுவன காவலாளியான இவரை, கே.டி.சி.நகா், பாரதி நகா் பகுதியைச் சோ்ந்த பிரேம் சங்கா் (25) கடந்த 21.8.2023இல் பாட்டிலால் தாக்கினாராம்.
இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப்பதிந்து பிரேம் சங்கரை கைது செய்தனா். இந்த வழக்கு திருநெல்வேலி மாவட்ட மூன்றாவது குற்றவியல் நீதித் துறை நடுவா் மன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதித் துறை நடுவா் விஜயராஜ்குமாா் வழக்கை விசாரித்து, பிரேம் சங்கருக்கு 3 ஆண்டுகள் சிைண்டனை விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.