டெஸ்லா பங்குகள் வீழ்ச்சி! ஒரே நாளில் எலானுக்கு ஏற்பட்ட இழப்பு எவ்வளவு?
புதுவை கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ரூ. 1,000 ஊக்கத்தொகை!
புதுச்சேரி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ. 1,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுவை சட்டப்பேரவைக் கூட்டம் துணைநிலை ஆளுநா் உரையுடன் திங்கள்கிழமை தொடங்கியது. இந்த நிலையில், ரூ.13,600 கோடி மதிப்பில் புதுவையின் 2025-26ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை இன்று தாக்கல் செய்து முதல்வர் ரங்கசாமி உரையாற்றினார்.
இதையும் படிக்க : அரசுப் பள்ளிகளில் மாலை சிற்றுண்டி, கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ரூ. 1,000: புதுவை பட்ஜெட் முழு விவரம்
இந்த உரையின்போது, புதுச்சேரியில் பயிலும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ. 1,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று கல்லூரியில் சேரும் மாணவ, மாணவிகள் தகுதியுடையவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் ஆகிய திட்டங்களின் கீழ் அரசுப் பள்ளிகளில் பயின்று கல்லூரியில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு ரூ. 1,000 ஊக்கத்தொகையாக ஏற்கெனவே வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.