உலகளவில் 56 மனித சிறுநீரகங்களை விற்ற உக்ரேனிய பெண் போலந்தில் கைது!
அரசுப் பள்ளிகளில் மாலை சிற்றுண்டி, நாள்தோறும் முட்டை! புதுவை பட்ஜெட்டில் அறிவிப்பு!
புதுவை அரசின் 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை காலை தாக்கல் செய்தார்.
புதுவை சட்டப்பேரவைக் கூட்டம் துணைநிலை ஆளுநா் உரையுடன் திங்கள்கிழமை தொடங்கியது. இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் மீதான விவாதம் நடைபெற்றது.
இந்த நிலையில், ரூ.13,600 கோடி மதிப்பில் புதுவையின் 2025-26ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து முதல்வர் ரங்கசாமி உரையாற்றி வருகிறார்.
இதையும் படிக்க : ஐபிஎல்: சென்னை - மும்பை போட்டிக்கான டிக்கெட் ரூ. 1.23 லட்சம்!
முக்கிய அறிவிப்புகள்
1. விவசாயிகளுக்கு மழைகால நிவாரணமாக ரூ. 2,000 வழங்கப்படும்.
2. நியாய விலைக் கடைகளில் இலவச அரிசியுடன், இரண்டு கிலோ கோதுமை இலவசமாக வழங்கப்படும்.
3. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு மாலை சிற்றுண்டி வழங்கப்படும்.
4. பள்ளி மற்றும் அங்கன்வாடிகளில் வாரத்தில் 3 நாள்கள் வழங்கப்படும் முட்டை, இனி வாரம் முழுவதும் வழங்கப்படும்.