அதிக கோல்கள் அடித்த பிரேசில் வீரர்..! மெஸ்ஸிக்குப் பிறகு புதிய சாதனை!
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் அதிக கோல்கள் அடித்து அசத்தியுள்ளார் ரபீனியா.
ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் கடைசி சுற்றுப் போட்டிகள் தொடங்கியுள்ளன. அதில் பார்சிலோனா அணி பென்பிகாவை 3-1 என வென்றது.
இந்தப் போட்டியில் பிரேசில் நாட்டைச் சேர்ந்த ரபீனியா 11, 42ஆவது நிமிஷங்களில் 2 கோல்கள் அடித்தார்.

இதன்மூலம் தற்போதைய சீசனில் அதிக கோல்கள் அடித்தவர் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
ஒரு சீசனில் அதிக கோல்கள் அடித்த பிரேசில் வீரர்களில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
மேலும், பார்சிலோனா அணிக்காக ஒரு சீசனில் அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் 2ஆம் இடம் பிடித்துள்ளார்.
மெஸ்ஸி 14 கோல்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். சாம்பியன்ஸ் லீக் வரலாற்றில் ரொனால்டோ 17 கோல்களுடன் முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
அதிக கோல்கள் அடித்த பிரேசில் வீரர்கள்
1. ரபீனியா - 11 (2-24-25)
2. காகா - 10 (2006-07)
3. ரிவால்டோ - 10 (1999-2000)
4. ஜார்டேல் - 10 (1999-2000)
5. ரோபர்டோ பெர்மினோ - 10 (2017-18)
6. நெய்மர் - 10 (2014-15)
⚽️️ 11 goals & 5 assists for Raphinha this season#UCLpic.twitter.com/JoKVhcvBGL
— UEFA Champions League (@ChampionsLeague) March 11, 2025