செய்திகள் :

நிறம் மாறும் உலகில்: ராவணன் பாடல் விடியோ..!

post image

பாரதிராஜா, நட்டி, ரியோ ராஜ் இணைந்து நடித்துள்ள புதிய படமான ‘நிறம் மாறும் உலகில்’ திரைப்படத்தின் ராவணன் பாடல் விடியோ வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குநர் பிரிட்டோ இயக்கத்தில் பாரதிராஜா, நட்டி, ரியோ ராஜ், சாண்டி இணைந்து நடித்துள்ள படம் ’நிறம் மாறும் உலகில்'. இந்தப் படத்தில் யோகிபாபு, கனிகா, வடிவுக்கரசி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சிக்னேச்சர் புரடக்சன்ஸ், ஜிஎஸ் சினிமாஸ் நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். தேவ் பிரகாஷ் ரேகன் இசையமைத்துள்ளார்.

நான்கு விதமான வாழ்க்கை, நான்கு கதைகள் அதை இணைக்கும் ஒரு புள்ளி, என நம் வாழ்வின் உறவுகளின் அவசியத்தைப் பேசும் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளதாகப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் இதன் டிரைலர், முதல் பாடலான ’ரங்கம்மா’ பாடல், 1.51 நிமிட முன்னோட்ட விடியோ வெளியாகி கவனம் ஈர்த்தது.

இந்தப்படம் மார்ச்.7ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியானது.

இந்நிலையில், படத்திலிருந்து ராவணன் பாடல் விடியோ வெளியாகியுள்ளது.

நெட்பிளிக்ஸில் தண்டேல் முதலிடம்!

சாய்பல்லவி, நாக சைதன்யா நடித்த தண்டேல் நெட்பிளிக்ஸில் முதலிடத்தில் உள்ளது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான நாக சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் உருவான தண்டேல் திரைப்படம் கடந்த பிப்.7 ஆம்... மேலும் பார்க்க

தேசிய இளையோர் தடகளம்: 1,000 மீ. ஓட்டப் பந்தயத்தில் தேசிய சாதனை!

தேசிய இளையோர் தடகளம் சாம்பியன்ஷிப்பில் 1,000 மீ. ஓட்டப் பந்தயத்தில் தேசிய சாதனையை நிகழ்த்தினார் உத்தரகண்ட் வீரர் சுராஜ் சிங். 20-ஆவது தேசிய இளையோர் தடகளம் சாம்பியன்ஷிப்பில் யு-18 பிரிவில் படில்புரா ஸ்... மேலும் பார்க்க

ஓம் காளி ஜெய் காளி - இணையத் தொடர் டிரைலர் வெளியீடு!

நடிகர் விமர் நடித்துள்ள இணையத் தொடரான ‘ஓம் காளி ஜெய் காளி’ டிரைலர் வெளியானது. ஜியோ ஹாட்ஸ்டார் தயாரித்து வழங்கும் புதிய இணையத் தொடர் ’ஓம் காளி ஜெய் காளி’. நடிகர் விமல் கதாநாயகனாக நடித்துள்ள இந்தத் தொடர... மேலும் பார்க்க

அரக்கனை வீழ்த்தினார்களா அஷ்ட காளிகள்? சுழல் - 2 விமர்சனம்!

‘ஓரம் போ’, ‘வ குவாட்டர் கட்டிங்’, ‘விக்ரம் வேதா’ உள்ளிட்ட தனித்துவமான களத்தில் திரைக்கதை அமைத்து வெற்றி பெற்ற இயக்குநர்களான இணையர்கள் புஷ்கர் - காயத்ரி எழுத்தில் உருவாகியிருக்கிறது ‘சுழல் - 2’ தொடர்.ச... மேலும் பார்க்க

மாசி பௌர்ணமி: திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம்!

மாசி மாத பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரத்தை அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்தது.திருவண்ணாமலையில் கிரிவலம் பிரசித்திப் பெற்றது. இங்குள்ள 14 கி.மீ தொலைவு கிரிவலப் பாதையை... மேலும் பார்க்க

ஓடிடியில் சம்யுக்தா விஜயனின் நீல நிறச் சூரியன்!

சம்யுக்தா விஜயனின் நீல நிறச் சூரியன் திரைப்படம் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.இயக்குநர் சம்யுக்தா விஜயன் எழுதி இயக்கி தயாரித்து நடித்திருக்கும் திரைப்படம் நீல நிறச் சூரியன். ... மேலும் பார்க்க