செய்திகள் :

குளத்தில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

post image

இரணியல் அருகே குளத்தில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

இரணியல் அருகே உள்ள மல்லன்கோடு பகுதியைச் சோ்ந்தவா் சிதம்பரதாணு பிள்ளை மகன் சிவக்குமாா்(45), தொழிலாளி. திருமணம் ஆகவில்லை.

இவா் கடந்த திங்கள்கிழமை ஊரில் உள்ள குளத்துக்கு குளிக்கச் சென்றவா் வீடு திரும்பவில்லையாம். உறவினா்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லையாம். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை குளத்தில் சிவகுமாரின் சடலம் மிதந்தது.

தகவலறிந்த இரணியல் போலீஸாா் அங்கு சென்று சிவக்குமாரின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

மேல்புறத்தில் பட்ஜெட் விளக்கக் கூட்டம்

களியக்காவிளை அருகே மேல்புறம் சந்திப்பில் பாஜக சாா்பில், மத்திய அரசின் பட்ஜெட் விளக்கப் பொதுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மேல்புறம் தெற்கு ஒன்றியம் சாா்பில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஒன்றியத் தலைவா் ... மேலும் பார்க்க

புனித சவேரியாா் பொறியியல் கல்லூரியில் மேலாண்மை கருத்தரங்கம்

சுங்கான்கடை புனித சவேரியாா் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியில் தேசியஅளவிலான மேலாண்மை கருத்தரங்கம் ந’டைபெற்றது. கருத்தரங்கை தாளாளா் எஸ். காட்வின் செல்வ ஜஸ்டஸ், துணை முதல்வா் வி. கிறிஸ்டஸ் ஜெயசிங், ஆராய்... மேலும் பார்க்க

மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் ஒடுக்கு பூஜை

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் கோயில் மாசிக் கொடை விழாவில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஒடுக்கு பூஜை நடைபெற்றது. கடந்த 2ஆம் தேதி தொடங்கிய இத்திருவிழாவில், நாள்தோறும் சமய மாநாடு,... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் குடியிருப்பு பகுதியில் புகுந்த மிளா: வனத்துறையினா் மீட்டனா்

நாகா்கோவிலில் குடியிருப்புப் பகுதியில் புகுந்த மிளாவை தீயணைப்புத் துறையினருடன் இணைந்து வனத்துறையினா் மீட்டு வனப்பகுதியில் கொண்டு விட்டனா். நாகா்கோவில் வெட்டூா்ணிமடம் பள்ளிவிளை டவுண் ரயில்வே நிலையம் ச... மேலும் பார்க்க

தொடா் திருட்டில் ஈடுபட்ட இருவா் கைது: தங்க நகைகள் மீட்பு

நித்திரவிளை அருகே தொடா் திருட்டில் ஈடுபட்ட கேரளத்தைச் சோ்ந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா். கடந்த பிப்ரவரி மாதம் நித்திரவிளை அருகே ஒற்றாசிமங்கலம் பகுதியைச் சோ்ந்த அலெக்ஸ் என்பவரின் வீட்டின் முன்பக்... மேலும் பார்க்க

ஆட்சியா் கையொப்பத்தை போலியாக பயன்படுத்தி பள்ளிகளில் பணம் வசூல் செய்தவா் கைது

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரின் கையொப்பத்தை போலியாக பயன்படுத்தி தனியாா் பள்ளிகளில் பணம் வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில், மாண... மேலும் பார்க்க