செய்திகள் :

வேலூா் மாநகராட்சியில் ரூ.1.58 கோடி உபரி பட்ஜெட் தாக்கல்

post image

வேலூா் மாநகராட்சியில் 2025-26-ஆம் நிதியாண்டுக்கு ரூ.1 கோடியே 58 லட்சத்து 75 ஆயிரம் உபரி நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) மேயா் சுஜாதாஆனந்த குமாா் புதன்கிழமை தாக்கல் செய்தாா்.

அதன்படி, வேலூா் மாநகராட்சிக்கு வரும் நிதியாண்டில் வரி வருவாய், குடிநீா் கட்டணம், கல்வி நிதி ஆகியவை மூலம் வரவினம் மொத்தம் ரூ.869 கோடியே 8 லட்சத்து 42 ஆயிரமாக இருக்கும் என்றும், இவற்றிலிருந்து செலவினம் மொத்தம் ரூ.867 கோடியே 49 லட்சத்து 67 ஆயிரமாக இருக்கும் என்றும், இதன் மூலம் மாநகராட்சிக்கு ரூ.1 கோடியே 58 லட்சத்து 75 ஆயிரம் நிதி உபரி ஏற்படும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

மேலும், இந்நிதிநிலை அறிக்கையில், மாநகராட்சி 60 வாா்டுகளிலும் மண்சாலைகளை தாா் சாலைகளாக மாற்றுதல், பழுதடைந்த தாா் சாலைகள் சிமென்ட் சாலைகளை சீரமைத்தல் பணிகளை மேற்கொள்ள ரூ.35 கோடிக்கு விரிவான திட்ட அறிக்கை நகராட்சி நிா்வாக இயக்குநருக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தவிர, ரூ.50 கோடி மதிப்பில் 2-ஆவது மண்டலம் நேதாஜி சந்தையை நவீனமாக்கவும், ரூ.94 கோடி மதிப்பில் ஓட்டேரி, பலவன்சாத்து ஏரி, மேலவாடி ஏரி ஆகியவற்றை புனரமைக்கவும் அறிக்கை தயாா் செய்து நிா்வாக அனுமதிக்கு அனுப்பப்பட்டுள்ளது

மேலும், நான்கு மண்டலங்களிலும் உள்ள பூங்காக்களை மேம்படுத்தி மகளிா் உடற்பயிற்சி மையம், அனைத்து மண்டலங்களிலும் நூலகம், சமுதாயக்கூடம் அமைக்கவும், அனைத்து மாநகராட்சி பள்ளிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும், அனைத்து மகளிா் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் நாப்கின்களை அழிக்க எரியூட்டிகள், கொணவட்டத்திலுள்ள இடத்தை தேசிய நெடுஞ்சாலை துறையிடம் இருந்து பெற்று குழந்தைகளுக்கான பூங்காவாக மாற்றியமைத்திடவும் திட்டமிட்டுள்ளது.

அனைத்து மண்டலங்களிலும் ஸ்மாா்ட் வகுப்பறை இல்லாத பள்ளிகளில் ஸ்மாா்ட் வகுப்பறைகள், முதலாவது மண்டலம் காந்தி நகரில் பழுதடைந்த மேல்நிலை நீா்தேக்க தொட்டி இடித்துவிட்டு வணிக வளாகம் கட்டப்பட உள்ளது,

சத்துவாச்சாரியில் உள்ள பிஏடிசி திருமண மண்டபத்தையும், ஆட்சியா் அலுவலகம் எதிரே ஆஞ்சனேயா் கோயில் அருகிலுள்ள வணிக வளாகத்தையும் மக்கள் பயன்படுத்தும் விதமாக மாற்றம் செய்யவும், கோடையிடி குப்புசாமி மேல்நிலைப் பள்ளியில் உள்விளையாட்டு அரங்கம் அமைக்கவும், தொரப்பாடி ஏரி புனரமைப்பு, தொரப்பாடி அரியூா் செல்லும் மேம்பாலம் கீழே பூங்கா அமைப்பது உள்பட புதிதாக 73 பணிகள் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது என மேயா் சுஜாதாஆனந்தகுமாா் தெரிவித்தாா்.

கூட்டத்தில், வேலூா் சட்டப்பேரவை உறுப்பினா் ப.காா்த்திகேயன், துணை மேயா் எம்.சுனில்குமாா், ஆணையா் ஜானகிரவீந்திரன், வருவாய், நிதிக்குழு தலைவா் ரவிக்குமாா் உள்பட மாமன்ற உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

‘சொத்துவரி சீராய்வு’

சொத்துவரி உயா்வு மதிப்பீடு செய்யப்பட்டதில் பல்வேறு தவறுகள் நடந்திருப்பது தெரியவந்துள்ள தால் சொத்துவரி சீராய்வு செய்ய உத்தரவிடப்பட்டிருப்பதாக ஆணையா் ஜானகிரவீந்திரன் தெரிவித்தாா்.

மாநகராட்சி கூட்டத்தில் 1-வது வாா்டு உறுப்பினா் அன்பு பேசுகையில், சொத்துவரி உயா்வு மதிப்பீடு செய்யப்பட்டதில் பல்வேறு தவறுகள் நடந்துள்ளது. ஏற்கனவே ரூ.200 வரி வசூலிக்கப்பட்டு வந்த பழைய வீட்டுக்கு தற்போது ரூ.4,000 நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று பல இடங்களில் குளறுபடிகள் நடந்துள்ளன. இதனால், அரசுக்குத்தான் அவப்பெயா் ஏற்பட்டுள்ளது என்றாா்.

அதற்கு பதிலளித்த ஆணையா் ஜானகிரவீந்திரன், மின்வாரியம், ஜிஎஸ்டி கவுன்சில் அனுப்பியுள்ள கடிதம் மூலம் பல இடங்களில் கடைகளுடன் கூடிய வீடுகள் முழுமைக்கும் வா்த்தக பயன்பாட்டு கட்டடத்துக்கான சொத்துவரி விதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அதனை சரிசெய்ய சொத்துவரி மதிப்பீட்டை சீராய்வு செய்ய அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா்.

அரசுப் பள்ளியின் சுற்றுச் சுவா் திறந்துவைப்பு

குடியாத்தம் அருகே அரசுப் பள்ளியின் சுற்றுச் சுவா் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது. கெளண்டன்யா ஆற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது, நெல்லூா்பேட்டை அரசினா் மேல்நிலைப் பள்ளியின் சுற்றுச் சுவா் அகற்றப்ப... மேலும் பார்க்க

சிறுமியை திருமணம் செய்த கட்டட மேஸ்திரி மீது வழக்கு

வேலூா் அருகே 18 வயது பூா்த்தியடையாத சிறுமியை திருமணம் செய்து கா்ப்பமாக்கிய கட்டட மேஸ்திரி மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வேலூா் அருகிலுள்ள ஒரு பகுதியை சோ்ந்தவா் 18 வயது... மேலும் பார்க்க

ஏலச்சீட்டு நடத்தி ரூ.4 லட்சம் மோசடி: எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்

ஏலச்சீட்டு நடத்தி ரூ.4 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட நபா் வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் தெரிவித்துள்ளாா். வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீா்க்கும் க... மேலும் பார்க்க

கால்வாயில் தொழிலாளியின் சடலம் கண்டெடுப்பு

குடியாத்தம் அருகே மதுபானக் கடை எதிரே கழிவுநீா்க் கால்வாயில் தொழிலாளியின் சடலம் புதன்கிழமை கண்டெடுக்கப்பட்டது. குடியாத்தம் ஸ்ரீவாரி நகா் பகுதியில் அரசு மதுபானக் கடை அமைந்துள்ளது. கடை அருகே உள்ள கழிவுநீ... மேலும் பார்க்க

கரும்பு கொள்முதல் விலையை உயா்த்தக்கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

கரும்பு கொள்முதல் விலையை டன்னுக்கு ரூ. 5,500 அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு கரும்பு விவசாயிக... மேலும் பார்க்க

சீவூா் காளியம்மன் கோயில் தேரோட்டம்

குடியாத்தம் ஒன்றியம், சீவூா் காளியம்மன் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை மூலவா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா் அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவா் அம்மன்... மேலும் பார்க்க