செய்திகள் :

உ.பி: `வழிபாட்டு தலங்களில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவதற்கு எதிராக நடவடிக்கை'- முதல்வர் யோகி உத்தரவு

post image

உத்தரப்பிரதேசத்தில் மகா கும்பமேளா முடிவடைந்ததையடுத்து, ஹோலி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையின்போது அதிக அளவில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படுவது வழக்கம். இதையடுத்து அதிக அளவில் ஒலி மாசு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மாநிலம் முழுவதும் நிறைவேற்றப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்தார். பின்னர் பேட்டியளித்த யோகி ஆதித்யநாத், ``வழிபாட்டுத் தலங்களில் ஒலி மாசு ஏற்படுவதை நிரந்தரமாக கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். மத வழிபாட்டு தலங்களில் இருக்கும் ஒலிபெருக்கி பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டியது அவசியம்'' என்று தெரிவித்தார். வங்கிகள், நிதி நிறுவனங்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதோடு பசுமாடுகள் கடத்தப்படுவதை தீவிரமாக கண்காணிக்கும்படியும், அவ்வாறு கடத்துபவர்கள் மீதும், வாகன உரிமையாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். வளர்ச்சித் திட்டங்கள் தாமதம் அடையக் கூடாது என்றும், ஒவ்வொரு திட்டத்திற்கும் ஓர் அதிகாரியை நியமித்து கண்காணிக்கும்படியும், திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து வாரம் ஒரு முறை அறிக்கை வாங்கும்படியும் அதிகாரிகளுக்கு ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

வெயில் காலம் என்பதால் தண்ணீர் விநியோகம் தடையற்ற முறையில் நடைபெறவேண்டும் என்றும், கோதுமை கொள்முதல் மையங்களில் விவசாயிகளுக்கு மலிவுவிலையில் உணவு வழங்குவதை உறுதி செய்யும்படியும் முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். மேலும் வேலைக்குச் செல்லும் பெண்களுக்காக விடுதி மற்றும் குறைந்த விலை உணவகங்களை ஏற்படுத்தும்படியும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். ஒவ்வொரு காவல் நிலையத்திலும் 10 கிரிமினல்களை அடையாளம் காணும்படியும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி: `மாணவர்களுக்கு ரூ.1000, குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2500 உதவித்தொகை' - பட்ஜெட் ஹைலைட்ஸ்!

புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 10-ம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. அதற்கு மறுநாள் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்ற நிலையில், நேற்று 12... மேலும் பார்க்க

`தமிழ்நாடு பிச்சைக்கார மாநிலமா... உயிரே போனாலும் அடிபணிய மாட்டோம்!' - ஸ்டாலின் காட்டம்

மத்திய அரசு, தமிழ்நாட்டில் அமலுக்குக் கொண்டுவரத் தீவிரம் காட்டி வரும் 'தேசியக் கல்விக் கொள்கை', 'தொகுதி மறுவரையறை' திட்டங்களுக்குக் கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன.மத்திய அரசின் தேசியக் கல்விக் க... மேலும் பார்க்க

NEP: `கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுங்கள்; கூட்டாட்சியை உடைத்து விடாதீர்கள்..!' - கேரள எம்.பி

மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கையையும், அதில் இருக்கும் மும்மொழிக் கொள்கை பெயரிலான இந்தித் திணிப்பையும் எதிர்த்து தற்போது நடைபெறும் நாடாளுமன்ற மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வில் தி.ம... மேலும் பார்க்க

திருப்பூர்: சிட்டாவில் பெயர் சேர்க்க ரூ.7000 லஞ்சம்... வசமாக சிக்கிய VAO; உதவியாளருடன் கைது!

திருப்பூர் மாவட்டம், அவிநாசியை அடுத்த முருகம்பாளையத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (42). திருப்பூர் குமார் நகரைச் சேர்ந்தவர் சாரதாமணி. இருவரும் உறவினர்கள். இந்நிலையில், சாரதாமணி சமீபத்தில் ஊத்துக்குளி ... மேலும் பார்க்க

25 ஆசிரியர்கள் பணி நீக்கம்; பாலியல் புகார்களில் அதிரடி காட்டும் பள்ளிக் கல்வித்துறை!

பாலியல் புகார்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. அதிலும் கடந்த சில மாதங்களாகத் தொடர்ச்சியாக வரும் ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார்களால் மாணவர்களிடையேயும், பெற்றோர்களிடையேயும் அச்ச உணர்... மேலும் பார்க்க

NEP Row: `தர்மேந்திர பிரதான் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்..!' - வைகோ ஆவேசம்

மத்திய அரசு, தமிழ்நாட்டில் அமலுக்குக் கொண்டுவரத் தீவிரம் காட்டி வரும் 'தேசியக் கல்விக் கொள்கை', 'தொகுதி மறுவரையறை' திட்டங்களுக்குக் கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன.குறிப்பாக, 'தேசியக் கல்விக் கொள... மேலும் பார்க்க