செய்திகள் :

பார்க்கிங் பிரச்னை; விஞ்ஞானியை அடித்துக் கொன்ற பக்கத்து வீட்டுக்காரர்கள்... மொகாலியில் அதிர்ச்சி!

post image

மொகாலியில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் எஜுகேசன் மற்றும் ரிசர்ச் மையத்தில் டாக்டர் அபிஷேக் (39) என்பவர் விஞ்ஞானியாகப் பணியாற்றி வந்தார். ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அபிஷேக் ஸ்விட்சர்லாந்தில் பணியாற்றி வந்தார். சமீபத்தில்தான் இந்தியா திரும்பி மொகாலியில் பணியில் சேர்ந்து இருந்தார். சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டுள்ள அபிஷேக்கிற்கு, அவரது சகோதரி தனது ஒரு சிறுநீரகத்தை தானமாக கொடுத்திருந்தார்.

தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்த அபிஷேக் மொகாலியில் செக்டர் 67ல் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். வாடகை வீட்டில் வசித்து வந்த அவர் தனது வீட்டிற்கு வெளியில் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி இருந்தார். அவரது இரு சக்கர வாகனம் அருகில் அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் மொகந்தி உட்பட சிலர் இரு சக்கர வாகனத்தை சூழ்ந்து நின்றுகொண்டிருந்தனர். அப்போது அங்கு நின்றவர்களுக்கும் அபிஷேக்கிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் அபிஷேக்கை அங்கு நின்று கொண்டிருந்த மொகந்தி என்பவர் கீழே பிடித்து தள்ளினார். அதோடு விடாமல் தரையில் விழுந்து கிடந்த அபிஷேக்கை மொகந்தி தொடர்ந்து அடித்து உதைத்தார்.

அதற்குள் அபிஷேக் குடும்பத்தினர் ஓடி வந்து மொகந்தியை விரட்டிவிட்டு அபிஷேக்கை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அபிஷேக் பரிதாபமாக இறந்து போனார். சம்பவம் நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவு சோசியல் மீடியாவில் பகிரப்பட்டு வருகிறது. அக்கேமரா பதிவின் அடிப்படையில் மொகந்தி மீது கொலைக்கு நிகரான வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அபிஷேக் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை: ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை - மருத்துவர் எடுத்த விபரீத முடிவுக்கு என்ன காரணம்?

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியைச் சேர்ந்தவர் டாக்டர் பாலமுருகன் (53). இவர் சென்னை திருமங்கலத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவரின் மனைவி சுமதி. இவர் வழக்கறிஞராக உள்ளார். இந்தத் தம்பதி... மேலும் பார்க்க

குஜராத்: மாணவர்கள் உட்பட 7 பேர்: 18 மாதங்களாக தொடர் பாலியல் வதை - கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடுமை!

குஜராத் மாநிலத்தில் கல்லூரி மாணவி ஒருவர் கடந்த 18 மாதங்களாக 7 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. குஜராத் மாநிலம், பனஸ்கந்தா மாவட்டத்தைச் சேர்ந்த 18 ... மேலும் பார்க்க

திருப்பூர்: தோட்டத்து வீட்டில் வசித்த தம்பதி அடித்துக் கொலை - ஆதாயக் கொலையா? - போலீஸார் விசாரணை!

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே துலுக்கமுத்தூர் ஊஞ்சப்பாளையம் சாலை பெரிய தோட்டத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி (82). இவரது மனைவி பருவதம் (75). விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர்களது மகன், மகள் இருவரும் தி... மேலும் பார்க்க

சென்னை: குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்ட மருத்துவர் - கடன் தொல்லை? ; விசாரித்து வரும் காவல்துறை

சென்னை திருமங்கலத்தில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. திருமங்கலம் 7-வது சாலையில் வசித்தவர்கள் மருத்துவர் பாலமுருகன் - வ... மேலும் பார்க்க

`ரூ.1,200 கோடி முறைகேடு; எலும்புகள் வைத்து பில்லி சூனியம்'- மும்பை மருத்துவமனையில் அதிர்ச்சி புகார்!

மும்பை பாந்த்ராவில் உள்ள லீலாவதி மருத்துவமனை மிகவும் பிரபலம் ஆகும். சமீபத்தில் நடிகர் சைஃப் அலிகான் அவரது வீட்டில் திருடனால் தாக்கப்பட்டபோது இந்த மருத்துவமனையில்தான் சிகிச்சை எடுத்துக்கொண்டார். தொண்டு... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: தாக்கியவர்களை கைதுசெய்யக் கோரி உயிரை மாய்த்த முதியவர்; எஸ்.பி அலுவலகம் முன் விபரீதம்!

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்தவர் சேது மாணிக்கம் (70). இவர் ஆட்டோ ஓட்டுநர். இந்நிலையில் ராமேஸ்வரம் என்.எஸ்.கே வீதி பகுதியில் ஆட்டோவை ஓட்டிச் சென்றுள்ளார் சேது மாணிக்கம். அப்போது சால... மேலும் பார்க்க