Tushar Gandhi: காந்தியின் பேரனை மறித்து கோஷம்; ஆர்எஸ்எஸ்-பாஜக நிர்வாகிகள் மீது வ...
கௌதம் மேனன் இயக்கத்தில் கார்த்தி?
நடிகர் கார்த்தி இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் கார்த்தி மெய்யழகன் திரைப்படத்திற்குப் பின், ’வா வாத்தியர்’ வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். அதேநேரம், பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் - 2 படத்திலும் தீவிரமாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில், சர்தார் - 2 படத்திற்குப் பின் கார்த்தி இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்கவுள்ளாராம்.
இதையும் படிக்க: ஆடையை அவிழ்த்தால் பெண்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா? பாடகி சிவாங்கி கேள்வி!
அண்மையில், கார்த்தியை நேரில் சந்தித்த கௌதம் மேனன் கதை ஒன்றைச் சொல்ல, அது கார்த்திக்கு பிடித்ததால் அடுத்தக்கட்ட பணிகளைத் துவங்க சொன்னதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இக்கதை எழுத்தாளர் ஜெயமோகனின் கதை எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே, ஜெயமோகன் எழுதிய ஐந்து நெருப்பு என்கிற சிறுகதையைத் தழுவி சிம்புவை வைத்து ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தை கௌதம் மேனன் இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.