செய்திகள் :

மதுரையில் லாரி - பேருந்து மோதி விபத்து

post image

மதுரையில் சாலையோரம் நின்றுகொண்டிருந்த லாரி மீது வேகமாக வந்த தனியார் பயணிகள் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மதுரை விமான நிலையம் அருகே வெளிப்புற வட்டச்சாலையில் வேகமாக வந்த பேருந்து, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியதில் இந்த விபத்து நேரிட்டதாகக் கூறப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருந்து மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த பயணிகள் பேருந்து இந்த விபத்தில் சிக்கியதாகவும் இதில், பேருந்தில் இருந்த 5 பயணிகள் படுகாயம் அடைந்தனர். வயதான பெண்மணி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேருந்துக்குள் சிக்கியிருந்த பயணிகளை மீட்க முடியாமல், கிரேன் வரவழைக்கப்பட்டு, கிரேன் உதவியோடு பேருந்து அப்புறப்படுத்தப்பட்டு, அதில் சிக்கியிருந்தவர்கள் மீட்கப்பட்டதாக, சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

பேருந்து ஓட்டுநர் அதிவேகமாக பேருந்தை இயக்கியதே விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. பேருந்து மோதிய வேகத்தில், சாலையோரம் நின்றிருந்த லாரி, அதன் முன் நிறுத்தப்பட்டிருந்த காரை இடித்ததில், கார் சாலையோரம் இருந்த பள்ளத்தில் விழுந்ததாகவும் கூறப்படுகிறது.

இளையராஜாவின் திரை இசைப் பயணத்தைக் கொண்டாட அரசு முடிவு! -ஸ்டாலின்

இளையராஜாவின் திரை இசைப் பயணத்தைக் கொண்டாட அரசு முடிவெடுத்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க

வைகை, பல்லவன் ரயிலில் ஒரு முன்பதிவில்லாத பெட்டி இணைப்பு!

வைகை மற்றும் பல்லவன் விரைவு ரயிலில் ஒரு முன்பதிவில்லாத பெட்டி இணைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.மதுரை - சென்னை எழும்பூர் இடையேயான வைகை விரைவு ரயில் மற்றும் சென்னை எழும்பூர் - காரைக்கு... மேலும் பார்க்க

டாஸ்மாக்கில் ரூ.1000 கோடிக்கு மேல் முறைகேடு!

டாஸ்மாக்கில் ரூ.1000 கோடிக்கு மேல் முறைகேடு ஏற்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.பார் உரிமங்கள் வழங்குவதிலும் அதற்கான ஒப்பந்தங்கள் வழங்குவதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. மேலும் பார்க்க

வெற்று விளம்பரங்களால் மக்கள் வயிற்றை நிரப்ப முடியாது: இபிஎஸ்

வெற்று விளம்பரங்களால் மக்கள் வயிற்றை நிரப்ப முடியாது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.திமுக அரசை விமர்சித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தன்னுடைய எக... மேலும் பார்க்க

6ம் கட்ட தவெக மாவட்டப் பொறுப்பாளர்கள்: விஜய் நியமனம்!

தமிழக வெற்றிக் கழகத்துக்கு 6ம் கட்டமாக 19 மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாக வசதியைக் கருத்தில் கொண்டு, கட்சியைப் ... மேலும் பார்க்க

உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு கட்டுப்பாடு!

உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்துள்ளது.உதகை மற்றும் கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் எத்தனை சுற்றுலா வாகனங்களை இயக்க முடியும் என்... மேலும் பார்க்க