திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதியம்மன் கோயில் பொங்கல் விழா: லட்சக்கணக்கான பெண்கள...
வைகை, பல்லவன் ரயிலில் ஒரு முன்பதிவில்லாத பெட்டி இணைப்பு!
வைகை மற்றும் பல்லவன் விரைவு ரயிலில் ஒரு முன்பதிவில்லாத பெட்டி இணைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
மதுரை - சென்னை எழும்பூர் இடையேயான வைகை விரைவு ரயில் மற்றும் சென்னை எழும்பூர் - காரைக்குடி இடையேயான பல்லவன் விரைவு ரயிலில் வரும் மே 11 முதல் கூடுதலாக ஒரு முன்பதிவில்லாத இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட பெட்டி இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: தமிழுக்கு முக்கியத்துவம்! தமிழ்நாடு பட்ஜெட் இலச்சினையில் 'ரூ' குறியீடு!
Standardization of LHB Trains!
— Southern Railway (@GMSRailway) March 13, 2025
The following LHB trains will now have FOUR GENERAL SECOND CLASS COACHES permanently for improved passenger convenience.#SouthernRailway#LHBTrains#PassengerConvenience#RailwayUpdatespic.twitter.com/KZhakfetuI
அதேபோல் மறுவழித்தடத்தில் சென்னை எழும்பூர் - மதுரை இடையேயான வைகை விரைவு ரயில், காரைக்குடி - எழும்பூர் இடையேயான பல்லவன் விரைவு ரயிலில் வரும் மே 12 முதல் கூடுதலாக ஒரு முன்பதிவில்லாத இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட பெட்டி இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைகை மற்றும் பல்லவன் விரைவு ரயிலில் முன்பதிவில்லாத இணைக்கப்படும் நிலையில், இரண்டும் ரயில்களிலும் முன்பதிவு செய்யப்பட்ட தனி இருக்கை வசதி பெட்டி குறைக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.