செய்திகள் :

வெற்று விளம்பரங்களால் மக்கள் வயிற்றை நிரப்ப முடியாது: இபிஎஸ்

post image

வெற்று விளம்பரங்களால் மக்கள் வயிற்றை நிரப்ப முடியாது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திமுக அரசை விமர்சித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தன்னுடைய எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது:

”திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே வயதான விவசாயத் தம்பதியினர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

இதே திருப்பூர் மாவட்டத்தின் பல்லடம் பகுதியில், இதே போல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்ததும், அப்போது அந்த இறந்தவரின் மனைவி, உங்கள் அமைச்சரை சரமாரியாக கேள்வி கேட்டு சாடியதெல்லாம் நினைவில் இருக்கிறதா? இல்லையா?

திருப்பூர் பகுதியில் இது போன்ற தொடர் குற்றங்கள் அதிகம் நடந்து கொண்டிருக்கிற நிலையில், அன்றே இந்த திமுக அரசும் முறையான நடவடிக்கை எடுத்திருந்தால், இன்று இந்த கொலை நடந்திருக்குமா?

அது சரி- நாட்டில் நடக்கும் கொலைகளை "தனிப்பட்ட பிரச்சனைகள்" என்று கடந்து செல்ல மட்டும் தானே முனைகிறீர்கள்..

"வருமுன் காப்பதும் இல்லை- பட்டும் திருந்துவது இல்லை" என்ற நிலையில் சட்டம் ஒழுங்கை தறிகெட்ட நிலைக்கு இட்டுச் சென்று, மக்களின் உயிரைக் கையில் பிடித்துக்கொள்ளும் அளவிற்கு தனிமனித பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ள ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

இதையும் படிக்க: பாமக எம்எல்ஏ மீது திமுகவினர் தாக்குதல்: அன்புமணி கண்டனம்!

விவசாயத் தம்பதி கொலையில் தொடர்புள்ளோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன்.

தனது ஆட்சியில் நடக்கும் அனைத்து தவறுகளையும், எதை போட்டு மறைக்க, என தெரியாமல் , யாரொ கதை வசனம் எழுதி கொடுத்த திசை திருப்பும் நாடகங்களில் நடிக்க கிளம்பியிருக்கும் ஸ்டாலின் அவர்களே, வெற்று விளம்பரங்களால் மக்கள் வயிற்றை நிரப்ப முடியாது ,

சர்வாதிகாரி என்று தன்னை தானே சொல்லிக் கொண்டால் மட்டுமே சட்டம் ஒழுங்கை சீர் செய்து விட முடியாது ,

இரும்புக்கரம் என்று வீரவசனம் பேசினால் மட்டும் தனி மனித பாதுகாப்பை உறுதி செய்து விட முடியாது ,

ஆட்சியில் மீதம் இருக்கின்ற சிறிது காலத்திலாவது , மக்கள் மீது உண்மையான அக்கறையுடன் ஆட்சி செய்து, சட்டம் ஒழுங்கில் கவனம் செலுத்தி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்துகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழக பட்ஜெட் 2025 - 26: செய்திகள் - உடனுக்குடன் - நேரலை!

வரும் நிதியாண்டுக்கான (2025 - 26) தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை, பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படவிருக்கிறது.நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்னும் சற்று நேரத்தில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவிருக... மேலும் பார்க்க

தேசிய சின்னத்தை அவமதிக்கவில்லை: தங்கம் தென்னரசு விளக்கம்

தேசிய சின்னத்தை அவமதிப்பதோ, குறைத்து மதிப்பிடுவதோ எங்களின் நோக்கம் அல்ல என்று தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.2025-26 நிதிநிலை அறிக்கை ஆவணத்தில் இருந்து ரூபாயின் அதிகா... மேலும் பார்க்க

கச்சத்தீவு திருவிழா: தமிழர்களின் பாதுகாப்புக்குச் செல்லும் கடற்படைக் கப்பல்கள், விமானம்!

கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலயத்தில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 14) தொடங்கவிருக்கும் ஆண்டுத் திருவிழாவில் பங்கேற்பதற்காக, ராமேசுவரத்திலிருந்து செல்வோரின் பாதுகாப்புக்காக இந்திய கடலோரக் காவல் படையின் கப்ப... மேலும் பார்க்க

அவதூறு வழக்கை ரத்து செய்ய மறுப்பு

முதல்வா், துணை முதல்வா் மற்றும் ஸ்ரீபெரும்புதூா் ஜீயா் குறித்து அவதூறு பரப்பியதாக கைதான திருச்சி ரங்கராஜன் நரசிம்மன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. திரு... மேலும் பார்க்க

நாளை 4 மண்டலங்களில் தமிழ்நாடு ஆசிரியா்கள் அறிவியல் மாநாடு

அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் தோ்வு செய்யப்பட்ட அறிவியல், கணித ஆசிரியா்களுக்கான தமிழ்நாடு ஆசிரியா்கள் அறிவியல் மாநாடு 4 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு நாமக்கல், மதுரை, புதுக்கோட்டை, வேலூா் ஆகிய மாவட்டங... மேலும் பார்க்க

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 100 இடங்களில் நேரடி ஒளிபரப்பு: சென்னை மாநகராட்சி

தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை சென்னை மாநகராட்சிக்குள்பட்ட 100 இடங்களில் ஒளிபரப்பப்படவுள்ளது. இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி நிா்வாகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் க... மேலும் பார்க்க