செய்திகள் :

கச்சத்தீவில் திருவிழா: ராமேஸ்வரத்திலிருந்து 100 படகுகளில் பக்தர்கள் பயணம்

post image

இந்தியாவிற்கு சொந்தமான கச்சத்தீவு கடந்த 1974-ம் ஆண்டு இலங்கைக்கு கொடுக்கப்பட்டது.  இதற்கு முன்பாக மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள்  கச்சத்தீவில் ஓய்வெடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். இதையொட்டி அங்கு சீனி குப்பன் என்ற மீனவரால் அந்தோணியார் கோயில் ஒன்று கட்டப்பட்டது. நாளடைவில் இங்கு இருநாட்டு மீனவர்களும் சேர்ந்து ஆண்டு தோறும் விழா கொண்டாடி வந்தனர். இலங்கையில் தமிழர் பிரச்னை போராக வெடித்ததை தொடர்ந்து இந்த விழா தடை பட்டு போனது.

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயம்

2009-ம் ஆண்டு போர் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து அந்தோணியார் ஆலய திருவிழா மீண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. இங்குள்ள பழைய ஆலயத்திற்கு பதிலாக இலங்கை அரசு புதிய ஆலயம் ஒன்றை சில ஆண்டுகளுக்கு முன் எழுப்பியுள்ளது. இவை தவிர இங்கு நிரந்தர கடற்படை மையத்தினையும் இலங்கை அரசு நிறுவியுள்ளது.

பக்தர்களை வழி அனுப்பிய மாவட்ட ஆட்சியர்

இந்நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கச்சத்தீவு திருவிழா தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் இந்தியா, இலங்கை நாடுகளைச் சேர்ந்த் பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்று புனித அந்தோணியாரை வழிபடுவதுடன், இரு நாடுகளிலும் உள்ள தமிழர்கள் தங்களின் உறவினர்களையும், நண்பர்களையும் சந்தித்து மகிழ்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்திய மீனவர்களையும் அவர்களது படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து வந்ததால் கடந்த ஆண்டு நடந்த கச்சத்தீவு திருவிழாவில் இந்திய மீனவர்கள் பங்கேற்காமல் புறக்கணித்தனர். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான திருவிழா இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இன்று மாலை கொடியேற்றத்துடன் துவங்கும் திருவிழாவினை தொடர்ந்து சிலுவை பாதை, தேர்பவனி, கூட்டு திருப்பலி ஆகியன நடக்கின்றன. நாளை காலை சிறப்பு திருப்பலியுடன் திருவிழா நிறைவடைகிறது.

கச்சத்தீவு திருவிழாவில் பக்தர்கள்

இன்று நடைபெறும் திருவிழாவில் பங்கேற்பதற்காக தமிழகம் மற்றும் தென் மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 3400 பக்தர்கள் கச்சத்தீவு செல்கின்றனர்.  ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து 78 விசைப்படகுகள் மற்றும் 22 நாட்டுப்படகுகளில்  பாதிரியார்கள், பக்தர்கள் மற்றும் மீனவர்கள் குடும்பத்தினர் இன்று காலை புறப்பட்டுச் சென்றனர்.

கச்சத்தீவு செல்லும் பக்தர்களை மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜித் காலோன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் உள்ளிட்டோர் வழியனுப்பி வைத்தனர்.

படகில் செல்லும் பக்தர்களை வழி அனுப்பும் மாவட்ட ஆட்சியர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், ''கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்லும் அனைத்து பக்தர்களுக்கும் தேவையான வசதிகள் முழுமையாக செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள், படகோட்டிகள் என அனைவரும் கடைபிடிக்க வேண்டிய விதிகள் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அனைவருக்கும் லைப் ஜாக்கெட் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் படகில் செல்லும் பயணிகளுக்கு அவசர மருத்துவ உதவி அளிப்பதற்காக இந்திய கடல் பகுதியில் சுங்கத்துறையினரின் 2 படகுகளில் மருத்துவர் குழு தயாராக இருப்பார்கள். முதல் குழுவாக 7 படகுகள் சென்றுள்ளன. தொடர்ந்து அனைத்து படகுகளும் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படும் திருவிழா முடிந்தவுடன் நாளை காலை இவர்கள் அனைவரும் ராமேஸ்வரம் திரும்புவார்கள்'' என்றார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

ஈரோடு: வண்ண வண்ணப் பொடிகளோடு ஹோலி பண்டிகை; உற்சாகமாகக் கொண்டாடிய வடமாநிலத்தவர்கள்! | Photo Album

ஹோலி பண்டிகையை உற்சாகமாக ஹோலி பண்டிகையை ஹோலி பண்டிகைஹோலி பண்டிகைஹோலி பண்டிகைஹோலி பண்டிகைஹோலி பண்டிகைஹோலி பண்டிகைஹோலி பண்டிகைஹோலி பண்டிகைஹோலி பண்டிகைஹோலி பண்டிகைஹோலி பண்டிகைஹோலி பண்டிகைஹோலி பண்டிகைஹோலி... மேலும் பார்க்க

Holi : கோவையில் களைகட்டிய வண்ணங்களின் திருவிழா - கலர்ஃபுல் ஹோலி க்ளிக்ஸ்!

ஹோலி 2025ஹோலி 2025ஹோலி 2025ஹோலி 2025ஹோலி 2025ஹோலி 2025ஹோலி 2025ஹோலி 2025ஹோலி 2025ஹோலி 2025ஹோலி 2025ஹோலி 2025ஹோலி 2025ஹோலி 2025ஹோலி 2025ஹோலி 2025ஹோலி 2025ஹோலி 2025ஹோலி 2025ஹோலி 2025ஹோலி 2025ஹோலி 2025ஹோ... மேலும் பார்க்க

நெல்லையப்பர் கோயில் மாசிமகம் தெப்பத்திருவிழா; தங்கக் கிளி வாகனத்தில் எழுந்தருளிய அம்பாள்! | Album

திருநெல்வேலி: நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் திருக்கோயில் மாசிமகம் தெப்பத்திருவிழா.! மேலும் பார்க்க

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி திருவிழா; அம்மனுக்கு சோறூட்டும் ஒடுக்குபூஜை! | Photo Album

ஒடுக்கு பூஜை காண திரண்ட பக்தர்களின் ஒருபகுதிவெள்ளை துணியால் மூடப்பட்டு உணவு பதார்த்தங்கள் எடுத்துச் செல்லப்படும் காட்சிமண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி திருவிழா; அம்மனுக்கு சோறூட்டும் ஒடுக்குபூஜை!... மேலும் பார்க்க

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் ஒடுக்குபூஜை; நள்ளிரவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

கன்னியாகுமரி மாவட்டத்தின் பிரசித்திபெற்ற கோயில்களில் ஒன்று மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில். இங்கு அம்மன் புற்றுவடிவில் காட்சி அருளுகிறார். கடற்கரையில் அமைந்துள்ள இக்கோயிலுக்கு கேரளாவைச் சேர்ந்த பெண் ப... மேலும் பார்க்க

Karadaiyan Nonbhu 2025 | யம பயம் நீங்கி தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்க அருளும் காரடையான் நோன்பு!

கணவரின் ஆயுள் நீடித்து இனிய இல்லறம் நிலைக்கவும் தீர்க்க சுமங்கலி வரம் பெறவும் வழிபட வேண்டிய காரடையான் நோன்பு எப்போது? வழிபடுவது எப்படி என்பது குறித்து விளக்குகிறார் மயிலை கற்பக லட்சுமி சுரேஷ். மேலும் பார்க்க