``பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாகிஸ்தான் தாக்க முயற்சி..'' - இந்திய அர...
India - Pakistan Tension: நேற்று தொடங்கிய இந்தியா - பாக். தாக்குதல்; இதுவரை நடந்தது என்ன?
இந்தியா - பாகிஸ்தான் இடையே நேற்று முதல் கடும் தாக்குதல் நடந்து வருகிறது.
இதுவரை இந்தத் தாக்குதலில் நடந்த முக்கிய 10 விஷயங்கள் குறித்து பார்க்கலாம்...
ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு, இந்தியா பாகிஸ்தான் பிரதேசங்களில் எந்தத் தாக்குதல்களையும் முன்னெடுக்கவில்லை. ஆனால், நேற்று பாகிஸ்தான் இந்தியா - பாகிஸ்தான் எல்லை அருகிலுள்ள பகுதிகளில் தாக்குதலைத் தொடங்கியது. இதில் 16 பேர் உயிரிழந்தனர். இந்தப் பகுதிகளில் தற்போது மீண்டும் தாக்குதலைத் தொடங்கியுள்ளது பாகிஸ்தான்.
நேற்று இரவு ஜம்மு பகுதியில் 8 ஏவுகணைகளைப் பாகிஸ்தான் ஏவியது. ஆனால், அந்த 8 ஏவுகணைகளையும் இந்தியாவின் ராணுவம் அதன் ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் மூலம் தகர்த்தெறிந்தது.

ஜம்மு, பதான்கோட் மற்றும் உதம்பூர் பகுதிகளில் உள்ள இந்தியாவின் ராணுவத் தளவாடங்களைக் குறிவைத்து ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது பாகிஸ்தான். அவை அனைத்தும் தடுக்கப்பட்டுவிட்டன என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானுக்கு தக்க பதிலடிகளை ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்கள் மூலம் தந்து வருகிறது இந்தியா.
தற்போது வெளியாகியிருக்கும் தகவல்களின்படி, இந்தியாவின் கடற்படை பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தைக் குறிவைத்துத் தாக்கி வருகிறது.
இந்தியாவில் உள்ள ஜம்மு, பதான்கோட், ஸ்ரீநகர் உள்ளிட்ட 24 முக்கிய விமான நிலையங்களை மூடியுள்ளது இந்தியா. நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு உதவ துருக்கி தனது சரக்கு விமானத்தைப் பாகிஸ்தானுக்கு அனுப்பியுள்ளது.
இந்தியாவின் தாக்குதலை அடுத்து, பாகிஸ்தானில் லாகூர், இஸ்லாமாபாத், சியால்கோட் ஆகிய இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் விமானம் ஒன்று இந்தியாவில் சுட்டு வீழ்த்தப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரை இந்தியா மீது பாகிஸ்தான் நடத்திய டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில் உயிர்ச்சேதமோ பொருள் சேதமோ ஏற்படவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.