``பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாகிஸ்தான் தாக்க முயற்சி..'' - இந்திய அர...
"கடவுளே... நாட்டை காப்பாற்றுங்கள்" - பாக். நாடாளுமன்றத்தில் அதன் முன்னாள் ராணுவ மேஜர் பேசியது என்ன?
இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பதற்ற நிலை அதிகரித்து வருகிறது.
ஆபரேஷன் சிந்தூர் மூலமாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 தீவிரவாத இடங்களில் தாக்குதலை நடத்தியது இந்தியா.
'இதற்கு தக்க பதிலடி கொடுப்போம்' என்று கூறியிருந்த பாகிஸ்தான், இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் தாக்குதல்கள் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது.

இந்த நிலையில், நேற்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அதன் உறுப்பினர் மற்றும் முன்னாள் ராணுவ மேஜர் தாஹிர் இக்பால், "கடவுளே இந்த நாட்டை காப்பாற்றுங்கள். பாகிஸ்தான் அரசியல் தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும், கடவுளை வணங்க வேண்டும் என்றும் கேட்டுகொள்கிறேன்.
அல்லா... உங்கள் முன் நாங்கள் தலை வணங்குகிறோம். தயவு செய்து இந்த நாட்டை காப்பாற்றுங்கள்" என்று பேசியுள்ளார்.
இவர் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூரை நடத்தியது குறிப்பிடத்தக்கது.