பிளஸ் 2 துணைத்தேர்வு கால அட்டவணை வெளியீடு!
பிளஸ் 2 துணைத்தேர்வு கால அட்டவணையை அரசு தோ்வுகள் இயக்கம் வெளியிட்டுள்ளது.
பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு 25.6.2025 முதல் துணைத்தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்தார்.
இந்நிலையில், துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவா்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாகவும், தனித்தோ்வா்கள் தாங்கள் தோ்வெழுதிய தோ்வு மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
+2 Supplementary Examination Time Table #tnschools#tnsedpic.twitter.com/4PEyaYq0zX
— Tamil Nadu School Education Department (@tnschoolsedu) May 9, 2025
வரும் ஜூன் 25 ஆம் தேதி மொழிப் பாடத் தேர்வுகள் நடைபெறுகின்றன. ஜூன் 26 ஆம் தேதி ஆங்கில பாடத் தேர்வும், ஜூன் 28 ஆம் தேதி முதல் இதரப்பாடங்களுக்கான தேர்வுகளும் நடைபெறவுள்ளன.
பிளஸ் 2 தோ்வு முடிவுகள் நேற்று(மே 8) வெளியிடப்பட்டது. தேர்வு எழுதியவர்களில் 7,53,142 மாணவ, மாணவிகள் (95.03 சதவிகிதம்) தேர்ச்சி பெற்றனர். வழக்கம்போல், மாணவர்களைவிட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றனர்.
இதையும் படிக்க: பொதுத் தேர்வு முடிவுகள்: நேரடி மறுகூட்டல் விண்ணப்பம் ரத்து!