"எரிபொருள் போதுமான அளவு இருக்கிறது; அச்சம் வேண்டாம்" - இந்தியன் ஆயில் நிறுவனம் வ...
பாதுகாப்பாக தில்லி திரும்பிய ஐபிஎல் வீரர்கள்!
ஹிமாசலப் பிரதேசம் தர்மசாலாவில் இருந்து சாலைமார்க்கமாக கிரிக்கெட் வீரர்கள் தில்லிக்கு இன்று (மே 9) அழைத்துவரப்பட்டனர்.
தில்லியின் சாஃபர்ஜங்க் பகுதியில் இருந்து சிறப்பு வந்தே பாரத் ரயில் மூலம் அவர்கள் அழைத்துச்செல்லப்படவுள்ளனர்.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஹிமாசலின் தர்மசாலா திடலில் நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் - தில்லி கேபிடல்ஸ் இடையிலான போட்டி நேற்று (மே 8) பாதியிலேயே நிறுத்தப்பட்டது
பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல் காரணமாக திடலின் விளக்குகள் அணைக்கப்பட்டு ரசிகர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
இரு அணி வீரர்களையும் திடலில் இருந்து பாதுகாப்பாக ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
தர்மசாலாவில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் தில்லி கேபிடல்ஸ் அணிகளின் வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவிப் பணியாளர்கள், ஒளிபரப்பு பணியாளர்கள் என மொத்தம் 300-க்கும் அதிகமானோர் ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.
தற்போதைய சூழலில் இவர்கள் அனைவரையும் விமானம் மூலம் மீட்க முடியாது என்பதால், சிறப்பு வந்தே பாரத் ரயில் மூலம் தில்லிக்கு பாதுகாப்பாக அழைத்துவர பிசிசிஐ முடிவு செய்தது.