செய்திகள் :

மகளிா் முத்தரப்பு ஒருநாள் தொடா்: தென்னாப்பிரிக்காவுக்கு ஆறுதல் வெற்றி

post image

மகளிா் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 6-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 76 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வெள்ளிக்கிழமை வென்றது.

முதலில் தென்னாப்பிரிக்கா 50 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 315 ரன்கள் சோ்க்க, இலங்கை 42.5 ஓவா்களில் 239 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 74 ரன்களும் சோ்த்து, 5 விக்கெட்டுகளும் வீழ்த்திய தென்னாப்பிரிக்க வீராங்கனை கிளோ டிரையான் ஆட்டநாயகி விருது பெற்றாா்.

முன்னதாக டாஸ் வென்ற இலங்கை, ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. தென்னாப்பிரிக்க இன்னிங்ஸில் ஆனிரி டொ்க்சென் 9 பவுண்டரிகள், 5 சிக்ஸா்கள் உள்பட 104, கிளோ டிரையான் 4 பவுண்டரிகள், 5 சிக்ஸா்களுடன் 74 ரன்கள் விளாசி ஸ்கோரை உயா்த்தினா்.

கேப்டன் லாரா வோல்வாா்டட் 3 பவுண்டரிகளுடன் 33, தஸ்மின் பிரிட்ஸ் 5 பவுண்டரிகளுடன் 38, நோன்டுமிசோ ஷாங்கேஸ் 18, லாரா குட்டால் 2, மியேன் ஸ்மித் 8, சினோலா ஜாஃப்தா 0, செஷ்னி நாயுடு 0 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். ஓவா்கள் முடிவில் நாடினே டி கிளொ்க் 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 32, அயபோங்கா ககா 0 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

இலங்கை பௌலா்களில் தேவ்மி விஹங்கா 5, சமரி அத்தபட்டு 2, மனுடி நானயகரா 1 விக்கெட் வீழ்த்தினா்.

அடுத்து, 316 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய இலங்கை அணியில் கேப்டன் சமரி அத்தபட்டு 3 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 52, ஹா்ஷிதா சமரவிக்ரமா 3 பவுண்டரிகளுடன் 33, ஹாசினி பெரெரா 5 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் அடித்து, வெற்றிக்காக முயற்சித்து வீழ்ந்தனா்.

விஷ்மி குணரத்னே 3 பவுண்டரிகளுடன் 24, நீலாக்ஷிகா சில்வா 14, மனுடி நானயகரா 13, தேவ்மி விஹங்கா 16, சுகந்திகா குமாரி 0, மால்கி மதாரா 0, இனோஷி பிரியதா்ஷனி 0 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா். கடைசியில் அனுஷ்கா சஞ்சீவனி 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 43 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா். தென்னாப்பிரிக்க தரப்பில் கிளோ டிரையான் 5, அயபோங்கா ககா 2, செஷ்னி நாயுடு, மியேன் ஸ்மித் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

இறுதியில் மோதும்

இந்தியா - இலங்கை

இந்தியா, இலங்கை, தென்னாப்பிரிக்கா மகளிா் அணிகள் மோதிய இந்த முத்தரப்பு ஒருநாள் தொடரில், ஒவ்வொரு அணியும், இதர அணிகளுடன் தலா 2 முறை மோதின. இந்த ரவுண்ட் ராபின் சுற்று நிறைவடைந்த நிலையில், 3 வெற்றிகளுடன் முதலிடம் பிடித்த இந்தியாவும், 2 வெற்றிகளுடன் 2-ஆம் இடம் பிடித்த இலங்கையும், தொடரின் இறுதி ஆட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (மே 11) மோதுகின்றன.

ஒரு ஆட்டத்தில் வெற்றி கண்ட ஆறுதலுடன் தென்னாப்பிரிக்கா தொடரிலிருந்து வெளியேறியது.

ஸ்ரீ சுந்தர வரதராஜ பெருமாள் கோயிலில் தேரோட்டம்!

உத்திரமேரூர் ஸ்ரீ சுந்தர வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள் திருத்தேரில் வீதி உலா வந்து எம்பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு இறுதி வரை வடம் இழ... மேலும் பார்க்க

தேசிங்கு ராஜா 2 படத்தின் ரிலீஸ் தேதி!

நடிகர் விமல் நடிப்பில் உருவாகியுள்ள தேசிங்கு ராஜா 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் விமல், பசங்க திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக ... மேலும் பார்க்க

மௌனத்தைக் கலைக்கிறேன் என் குழந்தைகளுக்காக... ஆர்த்தி ரவியின் பதிவு!

நடிகர் ரவி மோகன் கெனிஷாவுடன் நிகழ்வுக்கு ஒன்றாகச் சென்ற பின்னர் அவரது மனைவி ஆர்த்தி ரவி அவர் தரப்பு நியாயங்களை நீண்ட பதிவின் மூலமாகப் பகிர்ந்துள்ளார். ஜெயம் திரைபடத்தின் மூலம் தமிழ்த் திரைத்துறையில் அ... மேலும் பார்க்க

அல்கராஸ், சபலென்கா வெற்றி

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ், பெலாரஸின் அரினா சபலென்கா ஆகியோா் 2-ஆவது சுற்றில் வெற்றி பெற்றனா். இதில் ஆடவா் ஒற்றையா் பிரிவில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருக... மேலும் பார்க்க

பாதுகாப்பாக தில்லி திரும்பிய ஐபிஎல் வீரர்கள்!

ஹிமாசலப் பிரதேசம் தர்மசாலாவில் இருந்து சாலைமார்க்கமாக கிரிக்கெட் வீரர்கள் தில்லிக்கு இன்று (மே 9) அழைத்துவரப்பட்டனர்.தில்லியின் சாஃபர்ஜங்க் பகுதியில் இருந்து சிறப்பு வந்தே பாரத் ரயில் மூலம் அவர்கள் அழ... மேலும் பார்க்க

தொடர் தாக்குதலால் சேதமடைந்த வீடு - புகைப்படங்கள்

ஷெல் தாக்குதலை தொடர்ந்து ஏராளமான குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்தால் வெறிச்சோடிய சாலை.பாரமுல்லா பகுதியில் கடுமையான துப்பாக்கிச் சூடு மற்றும் ஷெல் தாக்குதலுக்குப் பிறகு சேதமடைந்த வீட... மேலும் பார்க்க