செய்திகள் :

போர் விமானங்களைப் பயன்படுத்திய பாகிஸ்தான்: கர்னல் சோஃபியா குரேஷி

post image

புது தில்லி: போர் விமானங்களையும் தாக்குதலுக்குப் பயன்படுத்தியது பாகிஸ்தான். ஆனால், பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் அளவோடு பதிலடி கொடுத்து வருகிறது என்று இந்திய ராணுவ கர்னல் சோஃபியா குரேஷி விளக்கம் கொடுத்துள்ளார்.

இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் தாக்குதல் தொடர்பாக வெளியுறவுத் துறைச் செயலர் விக்ரம் மிஸ்ரி, இந்திய ராணுவ கர்னல் சோஃபியா குரேஷி, விமானப் படை விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் செய்தியாளர்களிடம் விவரித்தனர்.

அப்போது பேசிய இந்திய ராணுவ கர்னல் சோஃபியா குரேஷி, இந்தியாவை தேவையில்லாமல் சீண்டுகிறது பாகிஸ்தான். பாகிஸ்தான் தாக்குதல்களை இந்தியா தக்க முறையில் முறியடித்துள்ளது. எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்திய விமானப்படை தளங்களை தாக்கும் பாகிஸ்தான் ராணுவத்தின் அனைத்து முயற்சிகளும் முறியடிக்கப்பட்டன. அதிவேக ஏவுகணைகளால் பஞ்சாப் விமானப்படை தளங்களை பாகிஸ்தான் தாக்க முயற்சித்துள்ளது. இந்தியா தரப்பில் பாலஸ்டிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தி பதில் தாக்குதல் கொடுக்கப்பட்டுளள்து என்று விளக்கம் கொடுத்துள்ளார்.

மேலும், பாகிஸ்தானின் ஆயுதங்களை இந்தியா தாக்கிய காணொலியை வெளியிட்டார் குரேஷி.

விமானப் படை விங் கமாண்டர் வியோமிகா சிங் கூறுகையில், இந்தியாவின் எஸ் 400 வான் பாதுகாப்பு அமைப்பு தாக்கப்பட்டதாக வதந்தி பரவி வருகிறது. தவறான தகவலை யாரும் நம்ப வேண்டாம். பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் நடவடிக்கையில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருகிறது.

ஜம்மு - காஷ்மீரின் எல்லைப் பகுதிகளான பாரமுல்லா, பூஞ்ச், ரஜௌரி, அக்னூர் பகுதிகளில் பாகிஸ்தான் பீரங்கி மூலம் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் தாக்குதல்களை இந்தியா முறியடித்துள்ளது. டிரோன்கள் மற்றும் வெடிபொருள்களைக் கொண்டும் தாக்குதலை மேற்கொண்டது பாகிஸ்தான். இரு தரப்பிலும் கடுமையான மோதல் ஏற்பட்டு தொடர்ந்து வருகிறது. பாகிஸ்தான் ஆயுதக் கிடங்குகள், தாக்கப்பட்டுள்ளன. விமானப் படைத் தளத்தின் அருகே உள்ள மருத்துவமனைகளை பாகிஸ்தான் தாக்கியது.

மக்கள் வசிக்கும் பகுதியை ட்ரோன்கள் மற்றும் ஆயுதங்கள் மூலம் பாகிஸ்தான் தாக்கியது. அனைத்து முயற்சிகளும் முறியடிக்கப்பட்டன என்று விளக்கம் கொடுத்தார் வியோமிகா சிங்.

விமானப் படைத் தளங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று, இன்று எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் வியோமிகா சிங் காட்டினார்.

இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்ட 5 முக்கிய பயங்கரவாதிகளின் விவரம் வெளியானது: தகவல்கள்

புது தில்லி: சிந்தூர் தாக்குதல் மற்றும் அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட இந்திய ராணுவத்தின் தாக்குதல்களில் கொல்லப்பட்ட 5 முக்கிய பயங்கரவாதிகளின் விவரங்கள் தெரிய வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.பஹல்க... மேலும் பார்க்க

பயங்கரவாத முகாம்களை தரைமட்டமாக்கிய இந்தியா: புதிய விடியோ

புது தில்லி: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய முப்படைகள் இணைந்து ஆபரேஷன் சிந்தூர் என்ற அதிரடித் தாக்குதலை நடத்தியது.இந்த நிலையில் இந்தியா - பாகி... மேலும் பார்க்க

போர்ப் பதற்றம்: உயரதிகாரிகளின் விடுமுறையை ரத்து செய்தது ஒடிசா அரசு!

இந்தியா-பாகிஸ்தான் ராணுவ மோதல் காரணமாக முக்கிய பணிகளில் இருக்கும் உயரதிகாரிகளின் விடுமுறையை ஒடிசா அரசு ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பொது நிர்வாகம், பொது குறை தீர்க்கும் துறை, வருவாய் கோட்ட ... மேலும் பார்க்க

ராணுவத்திற்கு உதவ சண்டீகரில் குவிந்த தன்னார்வலர்கள்!

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கடுமையான தாக்குதல் நடைபெற்றுவரும் நிலையில், இந்திய ராணுவத்தின் சேர விருப்பம் தெரிவித்து பஞ்சாபின் சண்டீகரில் பெண்கள், இளைஞர் பலர் குவிந்ததால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறத... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது! - விக்ரம் மிஸ்ரி

பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்றிரவு ட்ரோன் தாக்குதல் நடத்தியது குறித்து மத்திய வெளியுறவு... மேலும் பார்க்க

இந்தியா Vs பாகிஸ்தான்: செய்திகள் நேரலை!

முந்தைய செய்திகள்படிக்க : ஆபரேஷன் சிந்தூர்: செய்திகள் - நேரலைசென்னை வந்தடைந்த மாணவர்கள்! பஞ்சாப் மாநில எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பாதுகாப்பு கருதி, பஞ்சாப... மேலும் பார்க்க