முத்தரப்பு தொடர் இறுதிப்போட்டி: இலங்கையை வீழ்த்துமா இந்தியா?
மாமன் பட பாடல்கள்!
நடிகர் சூரி நடித்துள்ள மாமன் படத்தின் அனைத்து பாடல்களும் வெளியானது.
நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது முழுநேர நடிகராக சூரி மாறியுள்ளார்.
விடுதலை, கருடன், கொட்டுக்காளி படங்களைத் தொடர்ந்து விலங்கு இணையத் தொடர் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் மாமன் எனும் படத்தில் சூரி நாயகனாக நடித்துள்ளார்.
லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவான இந்தப் படத்துக்கு பிரபல இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.
நடிகர் சூரியே இந்தப் படத்துக்கு கதை எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உறவுகளின் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்க நடிகை ஸ்வாசிகா சூரியின் தங்கையாக நடிக்கிறார்.
இப்படம் வருகிற மே 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
இந்நிலையில், மாமன் படத்தின் அனைத்து பாடல்களும் அடங்கிய ஆல்பம் வெளியாகியுள்ளது. இந்தப் படத்துக்கு ஹசீம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.
#Maaman Full album out now – tune in and feel the bond.
— Actor Soori (@sooriofficial) May 10, 2025
: https://t.co/OwUNqioCjF#MaamanFromMay16
A @HeshamAWmusic Musical❤️
️ @Lyricist_Vivek ❤️#Mani#Eknath
Directed by @p_santh
Produced by @kumarkarupannan@larkstudios1@AishuL#Swasika#RajKiran#JayaPrakash… pic.twitter.com/ypQHQ2QTXV