செய்திகள் :

இந்திய ராணுவத்துடன் உறுதியாக துணைநிற்கிறோம்: ஸ்மிருதி மந்தனா

post image

இந்திய ராணுவத்துடன் உறுதியாக துணை நிற்பதாக இந்திய அணியின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் துல்லியத் தாக்குதலை இந்தியா மேற்கொண்டது. இந்தத் தாக்குதலில் பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இதனையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர்ப் பதற்றம் அதிகரித்தது.

இதையும் படிக்க: ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகள் எப்போது நடைபெறும்?

இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பாகிஸ்தான் தொடர்ச்சியாக ட்ரோன்களை கொண்டு தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தானின் தாக்குதல்களை இந்தியா வெற்றிகரமாக முறியடித்து வருகிறது. போர்ப் பதற்றம் காரணமாக ஐபிஎல் தொடரும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

உங்களுடன் துணைநிற்கிறோம்

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர்ப் பதற்றம் அதிகரித்து அசாதாரண சூழல் நிலவும் நிலையில், இந்திய ராணுவத்துடன் உறுதியாக துணை நிற்பதாக இந்திய அணியின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: நமது இந்திய ஆயுதப் படைகளின் தைரியம், தியாகம் மற்றும் ஈடுபாட்டுக்கு தலைவணங்குகிறேன். உங்களது வலிமை எங்களது சுதந்திரத்தைப் பாதுகாக்கிறது. நாங்கள் உங்களுடன் எப்போதும் உறுதியாக துணை நிற்கிறோம். வந்தே மாதரம் எனப் பதிவிட்டுள்ளார்.

ஸ்மிருதி மந்தனா தற்போது இலங்கையில் முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

தயவு செய்து ஓய்வு பெறாதீர்கள்; விராட் கோலிக்கு அம்பத்தி ராயுடு வேண்டுகோள்!

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறாதீர்கள் என விராட் கோலியிடம் முன்னாள் இந்திய வீரர் அம்பத்தி ராயுடு கேட்டுக் கொண்டுள்ளார்.இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கடந்த மே 7 ஆம் தேதி டெஸ்ட் கிரிக்கெட்ட... மேலும் பார்க்க

முத்தரப்பு தொடர் இறுதிப்போட்டி: இலங்கையை வீழ்த்துமா இந்தியா?

முத்தரப்பு ஒருநாள் தொடரில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி நாளை (மே 11) நடைபெறவுள்ளது.இந்திய மகளிரணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடி வர... மேலும் பார்க்க

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவிருந்த பாக். சூப்பர் லீக் ஒத்திவைப்பு!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவிருந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்திருக்கிறது.பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நட... மேலும் பார்க்க

டெஸ்ட்டில் இருந்து ஓய்வு பெற விராட் கோலி விருப்பம்?!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற விருப்பம் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. இங்கிலாந்தில் நடைபெறும் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொ... மேலும் பார்க்க

நாட்டைப் பாதுகாக்கும் ராணுவ வீரர்களுக்கு துணை நிற்போம்! - விராட் கோலி

பாகிஸ்தான் ராணுவத்தினரின் தாக்குதலுக்கு பதிலடி தாக்குதல் நடத்திய இந்திய ராணுவத்தினர் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி நன்றி தெரிவித்துள்ளார். இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் உச்சம் பெற்ற ... மேலும் பார்க்க

மும்பை அணிக்காக தொடர்ந்து விளையாட யஷஸ்வி ஜெய்ஸ்வால் விருப்பம்!

மும்பை அணிக்காக விளையாட விருப்பம் தெரிவித்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் மும்பை கிரிக்கெட் சங்கத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான யஷஸ்வி ஜெய்ஸ்வால், உள்ளூர் போட்டிகளில்... மேலும் பார்க்க