பாதுகாப்புப் படை நடவடிக்கைகளை நேரலையாக ஒளிபரப்ப வேண்டாம்: ஊடகங்களுக்கு அமைச்சகம்...
நாட்டைப் பாதுகாக்கும் ராணுவ வீரர்களுக்கு துணை நிற்போம்! - விராட் கோலி
பாகிஸ்தான் ராணுவத்தினரின் தாக்குதலுக்கு பதிலடி தாக்குதல் நடத்திய இந்திய ராணுவத்தினர் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி நன்றி தெரிவித்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் உச்சம் பெற்ற நிலையில், நேற்றிரவு பாகிஸ்தான் ராணுவத்தினர் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் வீசி இந்தியாவின் எல்லைப்புற நகரங்களான ராஜஸ்தான், பஞ்சாப், ஜம்மு - காஷ்மீர் மீது கடுமையான தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி கொடுத்த இந்திய ராணுவத்தினர் எஸ்-400-ஐ பயன்படுத்தி ஏவுகணை நடுவானிலேயே அழித்து ஒழித்தனர்.
இதற்கு அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் வாழ்த்து கூறி வரவேற்பளித்துள்ளனர்.
இதுகுறித்து இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “இந்த இக்கட்டான நேரத்தில் நாட்டை பாதுகாத்து அரணாக நிற்கும் ராணுவ வீரர்களுக்கு துணை நிற்போம். இந்த ஹீரோக்களுக்கு நாம் என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம். ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் தியாகங்களுக்கு நன்றி. ஜெய் ஹிந்த்!” எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க: ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகள் எப்போது நடைபெறும்?
