தெ.ஆ. டெஸ்ட் பயிற்சியாளர் டி20, ஒருநாள் அணிக்கும் பயிற்சியாளராக நியமனம்!
தெ.ஆ. அணியின் டெஸ்ட், ஒருநாள், டி20 என 3 அணிகளுக்கும் ஒரே பயிற்சியாளரை நியமித்துள்ளது.
தென்னாப்பிரிக்க அணியின் டெஸ்ட் பயிற்சியாளர் சுக்ரி கான்ராட் 2027 ஐசிசி உலகக் கோப்பை வரைக்கும் டெஸ்ட், ஒருநாள், டி20 என 3 அணிகளுக்கும் பயிற்சியாளராகத் தொடர்வார் என சிஎஸ்ஏ (தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அசோசியேஷன்) தெரிவித்துள்ளது.
சுக்ரி கான்ராட் தென்னாப்பிரிக்க டெஸ்ட் அணிக்காக 2023ஆம் ஆண்டு பயிற்சியாளராக தேர்வானார்.
இவரது தலைமையில் தெ.ஆ. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியாவுடன் தென்னாப்பிரிக்கா இறுதிப் போட்டியில் வரும் ஜூன் மாதம் 11ஆம் தேதி மோதவிருக்கிறது.
58 வயதாகும் சுக்ரி கான்ராட் தனது முதல் வெள்ளைப் பந்து பயிற்சியாளராக தெ.ஆ. அணிக்காக வரும் ஜூலையில் ஜிம்பாப்வே உடன் பொறுப்பேற்கிறார்.
டெஸ்ட்டில் சிறப்பாக செயல்பட்டதால் இவருக்கு இந்த வாய்ப்பினை வழங்கியதாகவும் வெள்ளைப் பந்தில் என்ன மாதிரியான மாற்றத்தைக் கொண்டுவருவார் என ஆர்வமாக இருப்பதாகவும் சிஎஸ்ஏவின் இயக்குநர் கூறியுள்ளார்.
கடைசியாக டி20 உலகக் கோப்பையில் தெ.ஆ. அணி இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது.
Cricket South Africa (CSA) is pleased to announce the appointment of Shukri Conrad as the Proteas Men’s all-format head coach.
— Proteas Men (@ProteasMenCSA) May 9, 2025
Conrad, who has led the Test side since January 2023, will now take charge of the white-ball formats starting with the T20 International tri-series… pic.twitter.com/zXNoutPnKE