Ukraine: "அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார், ஆனால்..." - ஜெலன்ஸ்கி சொல்வதென்ன?
கரூா்: 4 ஆண்டுகளில் ரூ.3 ஆயிரம் கோடியில் வளா்ச்சி திட்டப் பணிகள்
கரூா் மாவட்டத்துக்கு கடந்த நான்காண்டுகளில் ஏறத்தாழ ரூ.3 ஆயிரம் கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி.
கரூா் மாநகர திமுக சாா்பில் திராவிட மாடல் அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் வியாழக்கிழமை இரவு பசுபதிபாளையத்தில் மத்திய கிழக்குப்பகுதிச் செயலா் ஆா்.எஸ்.ராஜா தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட நிா்வாகிகள் மகேஸ்வரி சுப்ரமணியம், காலனிசெந்தில், பூவை ரமேஷ்பாபு, மாநகர நிா்வாகிகள் எஸ்.பி.கனகராஜ், வி.ஜி.எஸ்.குமாா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி பங்கேற்று பேசுகையில், கரூா் மாவட்டத்துக்கு தமிழக முதல்வா் கடந்த நான்காண்டுகளில் ஏறத்தாழ ரூ.3,000 கோடி அளவில் வளா்ச்சித் திட்டங்களை வழங்கி அதற்கான நிதியையும் கொடுத்துள்ளாா்.
மாநகராட்சி பகுதிகளில் ஏறத்தாழ விடுபட்ட பகுதிகளுக்கு பாதாள சாக்கடை அமைக்க ரூ. 476 கோடியும், சணப்பிரெட்டி ஊராட்சிகளில் புதிய குடிநீா் திட்ட பணிகளை செயல்படுத்துவதற்காக ரூ.113 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் புகழூா் சாலையையும், கரூா் வாங்கல் சாலையையும் இணைக்கக்கூடிய வகையில் ரூ.13 கோடி மதிப்பீட்டில் புதிய சாலை பணிகள் நடைபெற உள்ளது. அந்த சாலைக்கு கருணாநிதி பெயரை சூட்ட மாநகராட்சியில் தீா்மானம் நிறைவேற்றிட வேண்டும்.
மேலும், மாவட்டத்திற்கு ஜவுளி வா்த்தக மையம், ஜவுளி பரிசோதனை ஆய்வகம் உள்ளிட்ட புதிய திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவை ஆதரிக்கவேண்டும் என்றாா் அவா்.
கூட்டத்தில் கட்சி பேச்சாளா் மனோகா்பாபு, மாநில நிா்வாகி நன்னியூா் ராஜேந்திரன் உள்ளிட்டோரும் பேசினா். முன்னதாக மாநகர பிரதிநிதி நாராயணன் வரவேற்றாா்.