செய்திகள் :

Ukraine: "அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார், ஆனால்..." - ஜெலன்ஸ்கி சொல்வதென்ன?

post image

ரஷ்யா - உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் போரை முடிப்பது குறித்து சமீபத்தில் பேசியுள்ளார் விளாதிமிர் புதின்.

இதற்கு பதிலளித்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்யா இறுதியாக, போருக்கு முற்றுப்புள்ளிக்கு நடவடிக்கைகளை எடுக்க முன்வருவது மகிழ்ச்சியளித்தாலும், எந்தவொரு அமைதிப் பேச்சுவார்த்தைக்கும் முன்னர் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ளார்.

Russia - Ukraine - புதின்
Russia - Ukraine - புதின்

ரஷ்யா போர் நிறுத்தம் குறித்துப் பேசுவதை நேர்மறையானதாக கருதும் ஜெலன்ஸ்கி, "மொத்த உலகமும் இதைக் கேட்பதற்காக நீண்டகாலம் காத்திருக்கிறது, எந்த ஒரு போரையும் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முதல்படி போர் நிறுத்தம்தான்" எனக் கூறியுள்ளார்.

முன்னதாக இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்த மே 8ம் தேதி முதல் மே 10 வரை, 3 நாட்கள் போர் நிறுத்தத்தை அறிவித்திருந்தது ரஷ்யா. ஆனால் அந்த போர் நிறுத்தம் சரியாக பின்பற்றப்படவில்லை என உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.

உக்ரைன் அதிகாரிகள், போர் நிறுத்தத்தை அறிவித்த சில மணிநேரங்களுக்குள்ளாகவே ரஷ்யா அதனை மீறியதாகத் தெரிவித்துள்ளனர்.

ஜெலன்ஸ்கி இந்த போர் நிறுத்தம் ரஷ்யாவின் வெற்றி தின பிரச்சாரத்துக்கான 'நாடக நிகழ்ச்சி' என விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

zelensky
zelensky

போருக்கு முடிவுகட்ட வேண்டுமெனில், முதலில் போர் நிறுத்தம் வேண்டும் என்ற ஜெலன்ஸ்கியின் அழைப்பை மறுத்துவிட்டார் புதின். அதற்கு பதிலாக மே 15ம் தேதி இஸ்தான்புல்லில் உக்ரைனுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தும் திட்டத்தை முன்மொழிந்துள்ளார்.

நடக்க இருக்கும் புதின், ஜெலன்ஸ்கி நேரடி சந்திப்பு; இருவரும் ஒப்புகொள்ள காரணம் என்ன? - ஓர் அலசல்

'ரஷ்யா - உக்ரைன் போர் முடிவுக்கு வரப் போகிறதா?' என்ற ஆவல் உலகமெங்கிலும் மேலோங்கி உள்ளது. உலக நாடுகளின் நீண்ட நாள் முயற்சி... அமெரிக்க அதிபர் ட்ரம்பின் முக்கிய தேர்தல் வாக்குறுதி... நிறைவேறப் போகிறதா?ர... மேலும் பார்க்க

"என் பின்னால் வாருங்கள்; நாம் ஆளும் காலம் வந்துவிட்டது..!" - பாமக மாநாட்டில் அன்புமணி

பாட்டாளி மக்கள் கட்சியின் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு 12 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று (மே 11) நடைபெற்றது. மாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில், சாதிவாரி கணக்கெடுப்பு, வன்னியர்க... மேலும் பார்க்க

'சமீபத்திய நாள்களில் நேற்று இரவு தான்..!' - இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் நிலை என்ன?

ஏப்ரல் 22, 2025 அன்று ஜம்மு - காஷ்மீர் தீவிரவாதத் தாக்குதலால் தொடங்கிய பரபரப்பு இன்று வரை இந்தியா - பாகிஸ்தான் எல்லைகளில் ஓயவில்லை. இதற்கு பதிலடியாக, இந்தியா கடந்த மே 7-ம் தேதி 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம... மேலும் பார்க்க

"இனி இந்தியா என்ன செய்யும் என்பது பாகிஸ்தானுக்கு தெரியும்..!" - Vice Admiral ஏ.என்.பிரமோத்

பாகிஸ்தான் நடத்திய எல்லை தாண்டிய தாக்குதலுக்கு, இந்திய ராணுவம் எப்படி பதிலடி கொடுத்தது என்று முப்படையையும் சேர்ந்த அதிகாரிகள் நேற்று விளக்கமளித்தனர்.இதுகுறித்து கடற்படை வைஸ் அட்மிரல் ஏ.என்.பிரமோத் பேச... மேலும் பார்க்க

"தாக்குதலின் போது பாகிஸ்தான் செய்தது மிகப்பெரிய தவறு..." - ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி

இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து நேற்று இந்திய ராணுவத்தினர் விளக்கினார்கள். அதன் பின்னர், இந்தியா மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா எப்படி பதிலடி கொடுத்தது என்பதையும் விளக்கினார்கள்... மேலும் பார்க்க