செய்திகள் :

வினா - விடை வங்கி... முந்தைய ஆண்டு வினாக்கள்! - 2

post image

1. கீழ்க்காணும் கூற்றுகளுக்குரிய பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க

1. பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர் -

2. இரவார் இரப்பார்க்கு ஒன்று ஈவர்

(A) இவ்விரண்டு வரிகளும் அரசரின் பெருமையைப் பேசுகின்றன

(B) இவ்விரண்டு வரிகளும் வள்ளலின் பெருமையைப் போற்றுகின்றன

(C) இவ்விரண்டு வரிகளும் உழவரின் பெருமையைப் பேசுகின்றன

( D) இவ்விரண்டு வரிகளும் பணிவுள்ளவனின் பண்பைப் போற்றுகின்றன

2. "நாடாகொன்றோ காடாகொன்றோ

அவ்வழி நல்லை வாழிய நிலனே"

மேற்காணும் புறநானூற்றுப் பாடல் உலக மேம்பாட்டிற்கு யாரின் ஒழுக்கத்தை அடிப்படையாகக் கூறுகின்றது?

(A) பெண்டிர்

(B) ஆடவர்

(C) அரசர்

(D) அந்தணர்

3. சங்க காலத்தில் தமிழகம் முழுவதிலும் கொண்டாடப்பட்ட பண்டிகை எது?

(A) ஆடிப்பூரம்

(C) நவராத்திரி

(B) ஓணம்

(D) திருவாதிரை

4. "கவறும் கழகமும் கையும் தருக்கி

இவறியார் இல்லாகி யார்” - இக்குறள் யாருக்கு அறிவுரை கூறுகிறது?

(A) காவலர்கள்

(B) தூதுவர்கள்

(C) அமைச்சர்கள்

(D) வேந்தர்கள்

5. பின்வருவனவற்றைப் பட்டியல் I-றோடு பட்டியல் II-னைப் பொருத்துக

பட்டியல் I பட்டியல் II

(a) திருமுருகாற்றுப்படை 1. முடத்தாமக்கண்ணியார்

(b) பொருநராற்றுப்படை 2. நக்கீரர்

(C) சிறுபாணாற்றுப்படை 3. கபிலர்

(d) குறிஞ்சி பாட்டு 4. நல்லூர் நத்தத்தனார்

(a) (b) (c) (d)

(A) 1 3 2 4

(B) 1 2 4 3

(C) 2 1 4 3

(D) 3 2 1 4

6. கூற்று [A] : கற்பித்தல் கற்றல் செயல்முறையின் முழுமையான மறுசீரமைப்பிற்காக, புதிய கல்விக்கொள்கை, பாரம்பரிய ஆசிரியர் மையமாக இருந்த கற்றல், கற்பவரின் மைய அணுகுமுறையாக உருவாகின்றது.

காரணம் [R] : புதிய கல்வி கொள்கையில் மாணவர்களின் ஆக்கபூர்வதிறனை உயர்த்தி அவர்களின் முழுமையான வளர்ச்சியை உறுதி செய்தல்.

(A) [A] என்பது சரி ஆனால் [R] என்பது தவறு

(B) [A] என்பது தவறு, ஆனால் [R] என்பது சரி

(C) [A] மற்றும் [R] இவை இரண்டும் சரி மற்றும் [R) என்பது [A] யின் சரியான விளக்கம்

(D) (A] மற்றும் [R] இவை இரண்டும் சரி ஆனால் (R] என்பது (A) யின் சரியான விளக்கமல்ல

7. 'மண்வளத்தை மேம்படுத்துதல்' மற்றும் 'மழைநீர் சேகரிப்பை கட்டாயப்படுத்துதல்’ இக்கூற்றுடன் தொடர்புடையது

(A) பசுமைப்புரட்சி

(B) நீலப்புரட்சி

(C) பசுமையான புரட்சி

(D) மஞ்சள் புரட்சி

8. எந்தச் சட்டங்கள் சூழ்நிலைக் கருதி மாநில அரசுகளை மத்திய அரசு கட்டுப்படுத்தும் அதிகாரங்கள் கூறுகின்றன.

(A) சரத்து 368 மற்றும் 313

(B) சரத்து 356 மற்றும் 363

(C) சரத்து 365, 256 மற்றும் 257

(D) சரத்து 349 மற்றும் 350

9. இந்தியப் பொருளாதாரம் இதன் மூலம் குறிக்கப்படுகிறது

(i) குறைந்த தலா வருமானம்

(ii) உழைக்கும் மக்கள் அதிக விகிதத்தில் தொழிற்சாலைகளில் ஈடுபட்டுள்ளமை

(iii) மேம்படுத்தப்பட்ட மூலதன உருவாக்க விகிதம்

(iv) வேலை வாய்ப்பில் சிக்கல்கள்

(A) (i) மற்றும் (ii) சரியானவை

(B) (i) மற்றும் (iii) சரியானவை

(C) (ii) மற்றும் (iii) சரியானவை

(D) (ii) மற்றும் (iv) சரியானவை

10. இந்திய ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகளாவன

(i) நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டு வெளியிடுதல்

(ii) அரசாங்கத்திற்கு வங்கியாளராக செயல்படுதல்

(iii) நாட்டில் கடன் முறைகளை ஒழுங்குபடுத்துதல்

(A) (i) மற்றும் (ii) மட்டும்

(B) (i) மற்றும் (iii) மட்டும்

(C) (ii) மற்றும் (iii) மட்டும்

(D) (i), (ii) மற்றும் (iii)

11. இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு, அனைத்து மதங்களையும் சமமாக மதிக்கிறது மற்றும் அவர்களுக்கு சம வாய்ப்புகளை வழங்குகிறது என 1961ல் நேரு எழுதினார். அதை இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்த ராதாகிருஷ்ணன் "மக்களாகிய நாம் கண்ணுக்கு தெரியாத ஆவியின் யதார்த்ததையோ அல்லது வாழ்க்கைக்கு மதங்களின் பொருத்தத்தையோ நிராகரிக்கிறோம், அல்லது மதத்தை உயர்த்துகிறோம், என்று அர்த்தமல்ல மதச்சார்பின்மையே ஒரு நேர்மறையான மதமாக மாறுகிறது அல்லது அரசு தெய்வீக உரிமைகளை ஏற்றுக்கொள்கிறது என்று அர்த்தம் இல்லை" என்று வெளிப்படுத்தினார்.

பின்வருவனவற்றில் எது சிறப்பாக பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது?

(A) இந்திய மதச்சார்பின்மை என்பது ஒரு மத, மதச்சார்பற்ற அல்லது மதத்திற்கு எதிரானது

(B) இந்திய மதச்சார்பின்மை மதவாதத்துடன் முழுமையாக ஒத்துப்போகிறது

(C) இந்திய மதச்சார்பின்மை பொது வெளியில் மதத்தின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கவில்லை

(D) இந்திய மதச்சார்பின்மை என்பது ஒவ்வொரு மதத்தையும் சமமாகக் கருத வேண்டிய அவசியமில்லை

12. பின்வருவனவற்றில் எவை சரியாகப் பொருந்தியுள்ளன?

(i) நியூ இந்தியா மற்றும் காமன்வீல் - திருமதி. அன்னிபெசன்ட் அம்மையார்

(ii) கேசரி மற்றும் மராத்தா - பாலகங்காதர திலகர்

(iii) இந்தியர் கருத்து - கோபால் ஹரி தேஷ்முக்

(iv) இந்து பிரகாஸ் - மகாத்மா காந்தி

(A) (i) மற்றும் (ii)

(B) (i) மற்றும் (iv)

(C) (i) மற்றும் (ii)

(D) (iii) மற்றும் (iv)

13. கீழ்க்கண்ட வாக்கியங்களில் மெட்ராஸ் நேட்டிவ் அசோசியேஷன் பற்றிய சரியான வாக்கியங்களைத் தேர்ந்தெடுக்கவும்.

(i) இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது அரசியல் சார்ந்த அமைப்பு

(ii) இது 1852ம் ஆண்டு முதல் செயல்பட தொடங்கியது

(i i) மெட்ராஸ் நேட்டிவ் அசோசியேஷனின் நிறுவனர் ஜி.லஷ்மிநரசு ஷெட்டி

(iv) மெட்ராஸ் நேட்டிவ் அசோசியேஷனின் தலைவர் அனந்தாச் சார்லு

(A) (i i) மட்டும்

(B) (i) மற்றும் (ii) மட்டும்

(C) (i i) மற்றும் (iii) மட்டும்

(D) (ii) மற்றும் (iv) மட்டும்

14. வடக்கு அரைக்கோளத்தில் ஏற்படும் வளிமண்டல மேலடுக்கு சுழற்ச்சி எந்த திசையில் காற்று சுழலும்

(A) கடிகாரச் சுற்று

(B) நேராக

(C) எதிர்கடிகாரச் சுற்று

(D) வட்டமாக

15. ப்ளாக்செயின் டெக்னாலஜியின் (block chain technology) தூண்கள் எவை?

1. வெளிப்படைத் தன்மை

2. மாறுதல் இல்லாதது

3. பரவலாக்குதல்

(A) 1 மற்றும் 2

(B) 1 மற்றும் 3

(C) 2 மற்றும் 3

(D) 1, 2 மற்றும் 3

16. கீழ்க்காணும் சட்டங்களில் எது அடிமைகளின் பட்டயம் என ஜவஹர்லால் நேருவினால் விவரிக்கப்பட்டது?

(A) இந்திய அரசாங்கச் சட்டம் 1909

(B) இந்திய அரசாங்கச்சட்டம் 1919

(C) இந்திய அரசாங்கச் சட்டம் 1935

(D) இந்திய அரசாங்கச் சட்டம் 1947

17. இந்திய தேசிய காங்கிரஸ் எந்த ஆண்டு அமர்வில் வரலாற்று சிறப்புமிக்க 'பூர்ண சுயராஜ்' அறிக்கையை வெளியிட்டது

(A) 1907 சூரத்

(B) 1920 நாக்பூர்

(C) 1929 லாகூர்

(D) 1940 கராச்சி

18. 1930 ஆம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியால் சட்டமறுப்பு இயக்கத்தினை நடத்த செயற்குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?

(A) C. இராஜகோபாலாச்சாரியார்

(B) S. சத்தியமூர்த்தி

(C) T.S.S. இராஜன்

(D) T. பிரகாசம்

19. வன விலங்குகளைப் பாதுகாக்கும் நீண்ட கால வழிமுறைகளின் தொடர் அம்சங்கள் என்பவை

(i) தேசிய பூங்காக்கள், சரணாலயங்கள், உயிர்க்கோள காப்பகங்கள் ஆகியவற்றில்

வேட்டையாடுவது தடை செய்யப்பட வேண்டும்

(ii) மேலும் தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்கள் நிறுவப்பட வேண்டும்

(iii) வனவிலங்குகளின் சிறைப்பட்ட இனப்பெருக்கத்தை ஊக்குவிக்கக் கூடாது

(A) (i) மட்டும்

(B) (ii) மற்றும் (iii) மட்டும்

(C) (i) மற்றும் (ii) மட்டும்

(D) (i) மற்றும் (iii) மட்டும்

20. குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) 2019 பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது /எவை உண்மையானவை?

1. இந்தியாவில் 6 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்த அனைத்து வெளிநாட்டினருக்கும் குடியுரிமை வழங்கப்படும்

2. ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானில் இருந்து வந்து 31 டிசம்பர் 2014க்கு முன் இந்தியாவிற்குள் நுழைந்த இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள்,

ஜைனர்கள், பார்சிகள் அல்லது கிறிஸ்துவ சமூகங்களின் உறுப்பினர்களுக்கு குடியுரிமை

3. குறிப்பிட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு 12 ஆண்டுகளுக்கு பதிலாக 6 ஆண்டுகளுக்குள் குடியுரிமை வழங்கப்படும்

4. குடிமக்களின் தேசிய பதிவேட்டை தயாரிப்பதில் CAA உதவும்

(A) 1 மற்றும் 2 சரி

(B) 2 மற்றும் 4 சரி

(C) 3 மற்றும் 4 சரி

(D) 2 மற்றும் 3 சரி

21. பின்வருவனவற்றுள் இந்திய ரயில்வே மண்டலம் குறித்து தவறாகப் பொருத்தப்பட்டுள்ள விடையைக் காண்க.

(A) தெற்கு - சென்னை

(B) மத்திய பகுதி - ஜெய்பூர்

(C) வடக்கு - புது தில்லி

(D) கிழக்கு - கொல்கத்தா

22. பின்வரும் கூற்றுகளில் எவை மனித இனங்களைப் பற்றிய சரியான கூற்றுகள்?

(i) இனங்கள் என்பது அதிகமாகவோ அல்லது குறைவாகவோ நிரந்தர தனித்துவமான பண்புகளைக்கொண்ட ஒரு குழுவாகும்.

(ii) மனித இனங்கள் 7 இரத்த வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

(iii) தோலின் நிறம், உயரம், தலையின் வடிவம், முகம், மூக்கு, கண், முடி வகை மற்றும் இரத்த வகை ஆகியவற்றின் அடிப்படையில் இனங்கள் அடையாளம் காணப்பட்டு வகைப்படுத்தப்படுகின்றன.

(A) (i) மற்றும் (iii) மட்டும்

(B) (i) மற்றும் (ii) மட்டும்

(C) (i) மட்டும்

(D) (ii) மற்றும் (iii) மட்டும்

23. அக்பர் காலத்தில் இங்கிலாந்தை ஆட்சி செய்தவர்

(A) மன்னன் ஜான்

(B) முதலாம் இராணி எலிஸபெத்

(C) இராணி விக்டோரியா

(D) அரசர் இரண்டாம் சார்லஸ்

24. மெடோஸ் டெய்லர் யாரின் மரணம் பாஹ்மனி ஆட்சியின் முடிவின் ஆரம்பம் என்று கருதினார்.

(A) மஹ்மத் கவான்

(B) அஹ்மத் ஷா

(C) மஹ்மத் ஷா

(D) ஹுமாயூன்

25. கால வரிசைப்படி அடுக்குக

1. நேரு அறிக்கை

2. பூனா ஒப்பந்தம்

3. சைமன் குழு

4. கிரிப்ஸ் குழு

(A) 1, 2, 3, 4

(B) 3, 2, 4, 1

(C) 3, 1, 2, 4

(D) 2, 1, 4, 3

விடைகள்

1. (C) இவ்விரண்டு வரிகளும் உழவரின் பெருமையைப் பேசுகின்றன

2. (B) ஆடவர்

3. (D) திருவாதிரை

4. (D) வேந்தர்கள்

5. (C) 2 1 4 3

6. (C) [A] மற்றும் [R] இவை இரண்டும் சரி மற்றும் [R) என்பது [A] யின் சரியான விளக்கம்

7. (C) பசுமையான புரட்சி

8. (C) சரத்து 365, 256 மற்றும் 257

9. (B) (i) மற்றும் (iii) சரியானவை

10. (D) (i), (ii) மற்றும் (iii)

11. (C) இந்திய மதச்சார்பின்மை பொது வெளியில் மதத்தின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கவில்லை

12. (A) (i) மற்றும் (ii)

13. (C) (i i) மற்றும் (iii) மட்டும்

14. (C) எதிர்கடிகாரச் சுற்று

15. (D) 1, 2 மற்றும் 3

16. (C) இந்திய அரசாங்கச் சட்டம் 1935 - ans

17. (C) 1929 லாகூர்

18. (B) S. சத்தியமூர்த்தி

19. (C) (i) மற்றும் (ii) மட்டும்

20. (B) 2 மற்றும் 4 சரி

21. (B) மத்திய பகுதி - ஜெய்பூர்

22. (A) (i) மற்றும் (iii) மட்டும்

23. (B) முதலாம் இராணி எலிஸபெத்

24. (A) மஹ்மத் கவான்

25. (C) 3, 1, 2, 4

வினா - விடை வங்கி... பாளையக்காரர்கள் புரட்சி! - 2

1. காளையார்கோவில் அரண்மணை தாக்கப்பட்ட ஆண்டு?(a) 1772(b) 1773(c) 1775(d) 17802. முத்துவடுகநாதர் எந்த போரில் கொல்லப்பட்டார்?(a) நாகலாபுரம் போர்(b) களக்காடு போர்(c) காளையார்கோவில் போர்(d) மைசூர் போர்3. த... மேலும் பார்க்க

வினா - விடை வங்கி... முந்தைய ஆண்டு வினாக்கள்!

1. கீழ்க்காண்பவற்றில் எந்த ஒன்று, உலக அளவில், வெள்ளம் வறட்சி என்ற வடிவங்களில், புவித் தட்பவெப்ப முறைகளில் பாதகமான மாற்றங்களை ஏற்படுத்தி, இயற்கைப் பேரழிவுகள் நிகழக்காரணமாக இருக்கிறது?(A) கரியமில வாயு(C... மேலும் பார்க்க

வினா - விடை வங்கி.... பாளையக்காரர்கள் புரட்சி!

1. பாளையக்காரர்களை ஆங்கிலேயர்கள் எவ்வாறு அழைத்தனர்?(a) பாளையம்(b) சேவகர்கள்(c) போலிகார்(d) இவற்றில் எதுவுமில்லை2. பாளையக்காரர் முறையை முதன் முதலில் அறிமுகப்படுத்திய அரசு?(a) காகதீய அரசு(b) விஜயநகர அரச... மேலும் பார்க்க

வினா-விடை வங்கி... குப்தர்கள்! - 3

1. சமுத்திரகுப்தர் என அழைக்கப்படும் குப்த அரசர் யார்?a) முதலாம் சந்திரகுப்தர்b) இரண்டாம் சந்திரகுப்தர்c) ஸ்ரீகுப்தர்d) குமாரகுப்தர்2. குப்த அரசர்களின் அரசமரபு எது?a) குடியாட்சிb) அரசவாரிசு முறைc) ஜனநா... மேலும் பார்க்க

வினா - விடை வங்கி... குப்தர்கள்! - 2

1. முதலாம் சந்திரகுப்தர் குப்தப் பேரரசை தெற்கில் எங்கு வரை விரிவித்தார்?a) தமிழகம்b) வங்காளம்c) விந்தியா மலைd) ஹிமாசல பகுதி 2. சமுத்திரகுப்தர் மேற்கொண்ட தெற்குப் படையெடுப்பின் தனிச்சிறப்பு என்ன?a) எல்... மேலும் பார்க்க

வினா - விடை வங்கி... குப்தர்கள்!

1. குப்த பேரரசை நிறுவியவர் யார்?a) சமுத்திரகுப்தர்b) முதலாம் சந்திரகுப்தர் c) இரண்டாம் சந்திரகுப்தர் d) ஹர்ஷவர்தனர் 2. முதலாம் சந்திரகுப்தர் ஆட்சியைத் தொடங்கிய ஆண்டு?a) கி.பி. 320 b) கி.பி. 250 c) கி.... மேலும் பார்க்க