ஆபரேஷன் சிந்தூருக்குப் பின் பிரதமரின் முதல் உரை!
புது தில்லி; ஆபரேஷன் சிந்தூருக்குப் பின் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுடன் முதல்முறையாக உரையாற்றி வருகிறார்.
கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் பாகிஸ்தானுக்கு எதிராக ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கைக்குப்பின் தொடர்ச்சியாக ஜம்மு காஷ்மீரிலும், பாகிஸ்தான் எல்லையையொட்டிய பகுதிகளிலும் சண்டை நீடித்தது. இதனால் கடந்த 4 நாள்களாக ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப்பில் அசாதாரண சூழல் நிலவியது. இந்த சண்டை முடிவுக்கு வந்துள்ளதாக கடந்த சனிக்கிழமை(மே 10)மாலை 5 மணிக்கு தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்திய ராணுவ உயரதிகாரிகளுடன் பாகிஸ்தான் ராணுவ உயரதிகாரிகள் முதல்கட்டமாக இன்று(மே 12) பகல் பேச்சுவார்த்தை நடத்தினர். ஹாட்-லைன் தொலைபேசி வழியில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தை இன்று மாலை 6 மணியளவில் முடிவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் சற்று தணிந்திருக்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுடன் இன்றிரவு 8 மணிக்கு உரையாற்றினார். அவர் பேசியிருப்பதாவது: “