பாகிஸ்தானுடன் போா் நிறுத்தத்துக்கு முன்பாகவே நாடாளுமன்றத்தை கூட்டியிருக்க வேண்ட...
அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ததால் சண்டை நிறுத்தம் ஏற்பட்டது: டிரம்ப்
வாஷிங்டன்: அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ததால் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கு இடையில் சண்டை நிறுத்தம் ஏற்பட்டது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியிருக்கிறார்.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசுகையில், “இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போரை அமெரிக்கா தலையிட்டு நிறுத்தியிருக்கிறது. இந்தப் போரில் பல லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம்.
இந்தப் போரை நிறுத்துவதற்கு துணையாக இருந்த அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோருக்கு நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன்.
இந்தியாவுடனும், பாகிஸ்தானுடனும் அதிகளவில் வர்த்தகம் செய்யப்போகிறோம். பாகிஸ்தானுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறோம். வர்த்தகத்தை முதன்மையாக வைத்தே இந்தப் போர் நிறுத்தப்பட்டிருக்கிறது.
சண்டையை நிறுத்தவில்லை என்றால் உங்கள் இருவருடன் வர்த்தக உறவை துண்டித்துவிடுவேன் என இந்தியா - பாகிஸ்தான் ஆகிய நாடுகளிடம் கூறினேன். வர்த்தகத்தைப் பயன்படுத்தி போரை நிறுத்தியவர்கள் என்னைப் போல் யாரும் கிடையாது” எனத் தெரிவித்துள்ளார்.