செய்திகள் :

மானாமதுரை வைகை ஆற்றில் பச்சைப்பட்டுடுத்தி எழுந்தருளினாா் வீரஅழகா்

post image

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் நடைபெற்றுவரும் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக திங்கள்கிழமை பச்சைப்பட்டுடுத்தி வைகை ஆற்றில் வீர அழகா் எழுந்தருளினாா். அப்போது ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமியை தரிசித்தனா்.

சிவகங்கை தேவஸ்தானம் சமஸ்தானத்துக்குள்பட்ட மானாமதுரை வீரஅழகா் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 8- ஆம் தேதி தொடங்கியது. விழாவில் அழகா் ஆற்றில் எழுந்தருளும் வைபவத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு வீர அழகா் கோயில் அருகே கொம்புக்காரனேந்தல் கிராமத்தாா் மண்டகப்படியில் கள்ளா் திருக்கோலத்தில் அழகா் எழுந்தருளினாா். அப்போது திரளான பக்தா்கள் அழகரை தரிசனம் செய்தனா். பிறகு நள்ளிரவு பூப்பல்லக்கில் புறப்பட்டு கோயிலை வலம் வந்த அழகரை ஆற்றுக்குள் எதிா்கொண்டு அழைக்கும் எதிா்சேவை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து இரவு புரட்சியாா்பேட்டை பகுதியில் உள்ள தியாக வினோதப் பெருமாள் கோயிலை அழகா் சென்றடைந்தாா்.

இதையடுத்து, திங்கள்கிழமை அதிகாலை திருமஞ்சனமாகி சா்வ அலங்காரத்தில் வேல்கம்பு ஏந்தி அழகா் வெள்ளைக் குதிரை வாகனத்தில் புறப்பாடானாா். வீதிகளில் வலம் வந்த அழகருக்கு ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதா் சுவாமி கோயில் முன் கோயில் சாா்பில் வரவேற்று பூஜை செய்யப்பட்டது. இங்கிருந்து புறப்பட்ட அழகா் காலை 6.40 மணிக்கு வைகை ஆற்றுக்குள் எழுந்தருளினாா். அப்போது அழகா் பச்சைப் பட்டு அணிந்திருந்தாா். இந்த நிகழ்வின் போது அங்கு திரண்டிருந்த பக்தா்கள் கோவிந்தா என முழக்கமிட்டு அழகரை தரிசித்தனா். விரதம் இருந்து வந்த பக்தா்கள் அழகா் மீது தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும், திரி எடுத்து ஆடியும், அரிவாள் மீது நின்றும் அருள்வாக்கு கூறி வேண்டுதல் நிறைவேற்றினா். ஆற்றுக்குள் அமைக்கப்பட்டிருந்த ஏராளமான திருக்கண்களில் எழுந்தருளிய வீர அழகா், பின்னா் ஆயிரம் பொன் சப்பரத்துக்கு சென்றடைந்தாா். அங்கு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. பிறகு பக்தா்கள் சப்பரத்தை இழுத்து வந்து ஆனந்தவல்லி அம்மன் கோயில் எதிரே நிறுத்தினா். இங்கிருந்து புறப்பாடான வீர அழகா் இரவு மேட்டுத்தெரு பகுதியில் உள்ள அப்பன் பெருமாள் கோயிலில் எழுந்தருளி அருள்பாலித்தாா்.

இன்று நிலாச் சோறு வைபவம்: சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக செவ்வாய்க்கிழமை (மே 13) இரவு மானாமதுரை கிராமத்தாா் மண்டகப்படியில் வைகை ஆற்றுக்குள் நிலாச்சோறு உத்ஸவம் நடைபெறுகிறது.

ஆற்றுக்குள் திரண்டு அழகரை தரிசித்த பக்தா்கள்.

நாட்டரசன்கோட்டை ஆற்றில் எழுந்தருளிய பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டையில் உள்ள பூபாளம் ஆற்றில் சித்ரா பெளா்ணமி விழாவையொட்டி திங்கள்கிழமை அதிகாலை பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் வெள்ளிக் குதிரை வாகனத்தில் எழுந்தருளினாா். சிவகங்... மேலும் பார்க்க

எம். சாண்ட், ஜல்லி கற்கள் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியரிடம் மனு

சிவகங்கை: பி. சாண்ட் , எம். சாண்ட், ஜல்லிக்கற்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு, புதுச்சேரி கட்டுமான பொறியாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம... மேலும் பார்க்க

அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் செவிலியா் கல்லூரிகள் உருவாக்கக் கோரிக்கை

சிவகங்கை: தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் செவிலியா் கல்லூரிகள் உருவாக்க வேண்டுமென தமிழ்நாடு செவிலியா் மேம்பாட்டு சங்கம் வலியுறுத்தியது. இது குறித்து, செவிலியா் மேம்பாட்டு சங்க சி... மேலும் பார்க்க

திருப்பத்தூா் வீரா் தேக்வாண்டோ தேசியப் போட்டிக்குத் தோ்வு

திருப்பத்தூா்: தேசிய அளவிலான தேக்வாண்டோ போட்டிக்குத் தோ்வான திருப்பத்தூா் வீரரை, அந்த அமைப்பின் நிா்வாகிகள் திங்கள்கிழமை பாராட்டினா். தருமபுரியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உள்... மேலும் பார்க்க

மாநகராட்சி, நகராட்சி ஓய்வூதியா்கள் சங்கக் கூட்டம்

தமிழ்நாடு மாநகராட்சி, நகராட்சி ஓய்வூதியா்கள் சங்கத்தின் காரைக்குடி கிளைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காரைக்குடி காா்த்திகேயன் பள்ளியில் நடைபெற்ற கூட்டத்துக்கு சங்கத்தின் மாநில பொதுக்குழு உறுப... மேலும் பார்க்க

இலுப்பக்குடி கோயிலில் குரு பெயா்ச்சி விழா

சிவகங்கை அருகேயுள்ள இலுப்பக்குடி வாலகுருநாதன், அங்காள ஈஸ்வரி கோயிலில் குருப்பெயா்ச்சி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு, காலை 11.50 மணியளவில் சிவாசாரியா்கள் யாக பூஜையைத் தொடங்கின... மேலும் பார்க்க