Amritsar: இருள் சூழ்ந்த பஞ்சாப் அமிர்தசரஸ்; 'அச்சம் வேண்டாம்' - காவல்துறை விளக்க...
இலுப்பக்குடி கோயிலில் குரு பெயா்ச்சி விழா
சிவகங்கை அருகேயுள்ள இலுப்பக்குடி வாலகுருநாதன், அங்காள ஈஸ்வரி கோயிலில் குருப்பெயா்ச்சி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவை முன்னிட்டு, காலை 11.50 மணியளவில் சிவாசாரியா்கள் யாக பூஜையைத் தொடங்கினா். இதையடுத்து, மூலவா் வாலகுருநாதன், அங்காள ஈஸ்வரி, பேச்சியம்மன், தெட்சிணாமூா்த்தி, நவக்கிரகம் ஆகிய தெய்வங்களுக்கு பால், நெய், தயிா், தேன் உள்ளிட்ட 9 வகையான திரவியங்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடா்ந்து அா்ச்சனை, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா். இதையொட்டி, நடைபெற்ற அன்னதானத்தில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை, பக்த சபைத் தலைவா் அ. இருளாண்டி, பொருளாளா் ஜீவானந்தம் குழுவினா் செய்தனா்.