டிரம்ப்பின் புதிய உத்தரவால் இந்தியாவில் மருந்து விலை உயர வாய்ப்பு: நிபுணா்கள் எச...
பாகிஸ்தானுக்குப் பதிலடி: விராட் கோலி, ஆஷஸ் தொடர், ஆஸி., பவுலர்கள்.. ஜெனரல் ராஜீவ் காய் பேசியது என்ன?
இந்திய ராணுவ நடவடிக்கைகளின் பொது இயக்குநர் (DGMO) லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய், இன்றைய செய்தியாளர் சந்திப்பில், இந்திய விமானப்படையின் திறனை விளக்குவதற்காக கிரிக்கெட் உவமையைப் பயன்படுத்தினார்.
அப்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து இன்று விலகியுள்ள விராட் கோலியைக் குறிப்பிட்டுப் பேசினார்.

முப்படை ராணுவ அதிகாரிகளுடன் ஆபரேஷன் சிந்தூர் மற்றும் அதற்குப் பிறகான நடவடிக்கைகள் குறித்துப் பேசிய ராஜீவ் காய், "இன்று நாம் கிரிக்கெட் பற்றியும் பேச வேண்டும். இன்று விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதைக் கவனித்தேன். பல இந்தியர்களைப் போல அவர் எனக்கும் ஃபேவரைட்" என்றார்.
ஆஷஸ் தொடரை மேற்கோள்காட்டி பாகிஸ்தானின் தாக்குதல் நடவடிக்கைகளைத் திறம்படத் தடுத்தது குறித்துப் பேசினார்.
"எங்கள் ராணுவ நிலையங்களையும் தளவாடங்களையும் குறிவைப்பது மிகவும் கடினமானது" என்றார்.

"1970களில் என நினைக்கிறேன், ஆஸ்திரேலியாவுக்கும் இங்கிலாந்துக்கும் எதிராகப் புகழ்பெற்ற ஆஷஸ் தொடர் நடைபெற்றது.
அப்போது ஆஸ்திரேலியாவிடம் இரண்டு சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தனர். ஜெஃப் தாம்சனும் டென்னிஸ் லில்லியும் இங்கிலாந்து பேட்டிங் லைன்-அப்பை கிழித்துவிடுவார்கள்.
அப்போது ஆஸ்திரேலியர்கள் ஒரு பழமொழியை உருவாக்கினர். 'Ashes to ashes, dust to dust, if Thommo doesn't get ya, Lillee must' இதன் பொருள் ஒரு பௌலரிடம் நீங்கள் தப்பினால் மற்றொருவர் நிச்சயம் உங்கள் விக்கெட்டை எடுத்துவிடுவார்.
இதன் லேயர்களைப் புரிந்துகொண்டால் உங்களுக்கு நான் சொல்ல வருவது புரிந்துவிடும். நீங்கள் எத்தனை லேயர்களைக் கடந்துவந்தாலும் இந்த கட்டமைப்பில் உள்ள ஏதோ ஒரு லேயர் உங்களைத் தாக்கும்." என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs