செய்திகள் :

நடக்க இருக்கும் புதின், ஜெலன்ஸ்கி நேரடி சந்திப்பு; இருவரும் ஒப்புகொள்ள காரணம் என்ன? - ஓர் அலசல்

post image

'ரஷ்யா - உக்ரைன் போர் முடிவுக்கு வரப் போகிறதா?' என்ற ஆவல் உலகமெங்கிலும் மேலோங்கி உள்ளது. உலக நாடுகளின் நீண்ட நாள் முயற்சி... அமெரிக்க அதிபர் ட்ரம்பின் முக்கிய தேர்தல் வாக்குறுதி... நிறைவேறப் போகிறதா?

ரஷ்ய அதிபர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இருவரும் நேரில் சந்திக்க ஒப்புக்கொண்டுள்ளனர்.

ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்த முயற்சிகளும், பேச்சுவார்த்தைகளும் அனைத்தும் தொடர் தோல்விகளைத் தழுவி வந்த நிலையில், இப்போது இவர்கள் இருவரும் நேரில் சந்தித்துக்கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளனர்.

புதின், ஜெலன்ஸ்கி
புதின், ஜெலன்ஸ்கி

ரஷ்யாவின் உள்ளூர் நேரப்படி நேற்று (மே 11) மதியம் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், புதின் நேரடி பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று பேசியுள்ளார்.

இதற்கு ஜெலன்ஸ்கியும் ஒப்புக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "முழு மற்றும் நீடித்த போர் நிறுத்தத்திற்காகக் காத்திருக்கிறோம்.

இன்னும் மரணங்களை நீடிப்பதில் அர்த்தம் இல்லை. வியாழக்கிழமை புதினுக்காகத் துருக்கியில் காத்திருப்பேன். இந்த முறை ரஷ்யர்கள் எந்தச் சாக்குப்போக்கையும் தேட மாட்டார்கள் என்று நம்புகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

ஏன் புதின் நேரடி சந்திப்பிற்கு ஒப்புக்கொண்டார்?

மூன்று ஆண்டுகளைக் கடந்தும் ரஷ்யா - உக்ரைன் போர் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இதை முடித்துவைக்கப் பல முயற்சிகள் சென்றுகொண்டே இருக்கின்றன.

அதன் ஒரு பகுதியாக, கடந்த சனிக்கிழமை (மே 10) உக்ரைன் தலைநகரம் கீவில் நடந்த சந்திப்பு ஒன்றில் ஐரோப்பிய நாடுகள் கலந்துகொண்டன. அந்தச் சந்திப்பில், "புதின் வரும் திங்கட்கிழமை (இன்று) முதல் உடனடி 30 நாள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், அவர் சில சிக்கல்களைச் சந்திக்க நேரிடும்" என்று எச்சரிக்கப்பட்டது.

இதிலிருந்து தப்பிக்கவே தற்போது புதின் நேரடி சந்திப்பிற்கு ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், அவர் போர் நிறுத்த நிபந்தனை பற்றி வாய் திறக்கவே இல்லை.

ட்ரம்ப்
ட்ரம்ப்

போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டால்தான் பேச்சுவார்த்தை என்று ஐரோப்பிய நாடுகள் கூற, ட்ரம்போ, உடனடியாக இருவரின் சந்திப்பும் நடந்தாக வேண்டும் என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.

இதனால், வேறு வழியின்றி, ஜெலன்ஸ்கியும் புதினுடனான சந்திப்பிற்கு ஒப்புக்கொண்டார்.

ஜெலன்ஸ்கியின் நிலை..?

ரஷ்யாவைவிட உக்ரைன் மிகச் சிறிய நாடு. ரஷ்யா உக்ரைனைவிட 28 மடங்கு பெரிதானது. உக்ரைன் நாட்டின் பொருளாதாரமும் அவ்வளவு பெரிதல்ல.

அதனால், போர் ஆரம்பித்த சில நாள்களிலேயே ரஷ்யா உக்ரைனைக் கைப்பற்றிவிடும் என்று கூறப்பட்டது. ஆனால், இன்றுவரை உக்ரைன் இந்தப் போரில் முட்டி மோதித் தப்பிக்கொண்டு வருகிறது. இதற்குப் பிற நாடுகளின் உதவி முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த உதவிகளில் அமெரிக்காவின் உதவி மிக மிக முக்கியமானது.

உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து பெரியளவில் நிதி வழங்கி வருவதை ட்ரம்ப் விரும்பவில்லை. அவர் இதனால் அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படுகிறது என்று கருதுகிறார்.

இதனால், இந்தப் போரைச் சீக்கிரம் முடிக்க வேண்டும் என்று ட்ரம்ப் நினைக்கிறார். இதற்குப் புதின், ஜெலன்ஸ்கி என யார் தடையாக இருந்தாலும், அவர்களுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்த ட்ரம்ப் தயார்.

ட்ரம்பின் இந்த அழுத்தத்தால்தான், புதின் உடனடி 30 நாள் போர் நிறுத்தத்தைப் பற்றி எதுவும் பேசவில்லை என்றாலும், ஜெலன்ஸ்கி புதினைச் சந்திக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

துருக்கியில்...

இந்தப் பேச்சுவார்த்தை வரும் வியாழக்கிழமை துருக்கியில் நடக்க உள்ளது. இரு நாட்டுத் தலைவர்களின் பேச்சுவார்த்தை எப்படி முடிய உள்ளது என்று பார்க்க உலகமே காத்திருக்கிறது.

பாகிஸ்தானுக்குப் பதிலடி: விராட் கோலி, ஆஷஸ் தொடர், ஆஸி., பவுலர்கள்.. ஜெனரல் ராஜீவ் காய் பேசியது என்ன?

இந்திய ராணுவ நடவடிக்கைகளின் பொது இயக்குநர் (DGMO) லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய், இன்றைய செய்தியாளர் சந்திப்பில், இந்திய விமானப்படையின் திறனை விளக்குவதற்காக கிரிக்கெட் உவமையைப் பயன்படுத்தினார். அப்போத... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற அரசு ஊழியரா நீங்க? Retirement Jobகளுக்கான இந்த இணையதளம் உங்களுக்குத்தான்!

மத்திய, மாநில அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் ஓய்வுக்குப் பிறகும் வேலை செய்ய விரும்பினால் அவர்களுக்குவேலை வாய்ப்புகளைஅடையாளம் காட்டும் சேவையைத்தொடங்கியிரு... மேலும் பார்க்க

`பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் தலையிட்டது; நம் விமானிகள்.!’ - ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி

இந்தியா பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இன்று ராணுவ அதிகாரிகள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். இதில் இந்திய விமானப்படை அதிகாரி, ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி, "எங்களது சண்டை தீவிரவாத... மேலும் பார்க்க

"என் பின்னால் வாருங்கள்; நாம் ஆளும் காலம் வந்துவிட்டது..!" - பாமக மாநாட்டில் அன்புமணி

பாட்டாளி மக்கள் கட்சியின் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு 12 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று (மே 11) நடைபெற்றது. மாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில், சாதிவாரி கணக்கெடுப்பு, வன்னியர்க... மேலும் பார்க்க

'சமீபத்திய நாள்களில் நேற்று இரவு தான்..!' - இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் நிலை என்ன?

ஏப்ரல் 22, 2025 அன்று ஜம்மு - காஷ்மீர் தீவிரவாதத் தாக்குதலால் தொடங்கிய பரபரப்பு இன்று வரை இந்தியா - பாகிஸ்தான் எல்லைகளில் ஓயவில்லை. இதற்கு பதிலடியாக, இந்தியா கடந்த மே 7-ம் தேதி 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம... மேலும் பார்க்க

"இனி இந்தியா என்ன செய்யும் என்பது பாகிஸ்தானுக்கு தெரியும்..!" - Vice Admiral ஏ.என்.பிரமோத்

பாகிஸ்தான் நடத்திய எல்லை தாண்டிய தாக்குதலுக்கு, இந்திய ராணுவம் எப்படி பதிலடி கொடுத்தது என்று முப்படையையும் சேர்ந்த அதிகாரிகள் நேற்று விளக்கமளித்தனர்.இதுகுறித்து கடற்படை வைஸ் அட்மிரல் ஏ.என்.பிரமோத் பேச... மேலும் பார்க்க