பல ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்துக்கொண்ட பாரதி கண்ணம்மா தொடர் பிரபலங்கள்!
பல ஆண்டுகளுக்குப் பிறகு, நடிகை கண்மணி மனோகரனின் வளைகாப்பு நிகழ்ச்சியில் பாரதி கண்ணம்மா தொடர் பிரபலங்கள் சந்தித்துக்கொண்டுள்ளனர்.
சின்ன திரை பிரபலங்களான கண்மணி மனோகரன் - அஷ்வத் தம்பதியினர் சில நாள்களுக்கு முன்பு தாங்கள் கருவுற்றிருப்பதை அறிவித்தனர்.
இதைக் கொண்டாடும் விதமாக அண்மையில் சிங்கப்பூர் சென்று இருந்தனர். இது தொடர்பான விடியோக்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டனர். இந்த விடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலானது.

இந்த நிலையில், கண்மணி மனோகரன் - அஷ்வத் தம்பதியினரின் வளைகாப்பு நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இதில் சின்ன திரை பிரபலங்கள் பலர் பங்கேற்றனர்.
அதிலும் குறிப்பாக பாரதி கண்ணாம்மா தொடரில் கண்மணி மனோகரனுடன் நடித்த அருண்குமார், ஃபரீனா, ஸ்ருதி சண்முகப்பிரியா, ரோஷினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இது குறித்து கண்மணி மனோகரன் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவில், ”பாரதி கண்ணம்மா தொடர் குழுவினரை சந்தித்து பல ஆண்டுகள் ஆகிறது, நாங்கள் நகைச்சுவையாக பேசிக்கொண்டது நேற்று நடந்ததுபோல் இருக்கிறது.
பாரதி கண்ணம்மா குழு என்பது வெறும் பெயரல்ல, உண்மையான அன்பினால் கட்டமைக்கப்பட்ட குடும்பம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க: அரசுக்கு எதிராகப் பேச நடிகர்கள் தயக்கம்: அமலாக்கத் துறைக்குப் பயப்படுகிறார்கள்! -ஜாவேத் அக்தர்