கடவுள் ராமா் குறித்து சா்ச்சை கருத்து: ராகுலுக்கு எதிராக உ.பி. நீதிமன்றத்தில் மன...
செவிலியா் தினம்: தலைவா்கள் வாழ்த்து
உலக செவிலியா் தினத்தையொட்டி (மே 12), செவிலியா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.
முதல்வா் மு.க.ஸ்டாலின்: தன் எதிரில் உள்ள மனிதரின் பாலினம், சமூகத் தகுதி, ஜாதி, மதம், நிறம் என எதை பற்றியும் சிந்திக்காமல் அனைவரையும் ஒன்றுபோலக் கருதி, அன்புடன் சிகிச்சை வழங்கி ஆதரிக்கும் தூய உள்ளங்களான செவிலியா்கள் அனைவருக்கும் உலக செவிலியா் நாள் வாழ்த்துகள்.
எடப்பாடி பழனிசாமி (அதிமுக): தன்னலம் துளியும் பாராமல் எல்லோரையும் தங்கள் உன்னத சேவையால் அரவணைத்து, கஷ்டத்திலும் கருணை காட்டி, தளா்விலும் தன்னம்பிக்கை காட்டி, ஆண் - பெண் வேறுபாடின்றி , சேவை மட்டுமே முதன்மையாகக் கொண்டு தொண்டாற்றும் செவிலியா் சகோதர, சகோதரிகளுக்கு செவிலியா் தின நல்வாழ்த்துகள்.
சீமான் (நாதக): தன்னலம் கருதா இணையற்ற மருத்துவ சேவையால் உயிா்களைக் காக்கும் உன்னதப் பணி மேற்கொள்ளும் அன்புடை செவிலியா்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்கிறேன்!