கொத்துக் கொத்தாய் காய்க்கும் கொடுக்காய்ப்புளி; குவிந்து கிடக்கும் மருத்துவ பலன்க...
வைகையாற்றில் மூழ்கிய பிளஸ் 2 மாணவா் உயிரிழப்பு
மதுரை: மதுரை மாவட்டம், சோழவந்தான் பகுதி வைகையாற்றில் மூழ்கிய பிளஸ் 2 மாணவா் உயிரிழந்தாா்.
சோழவந்தான் ஜெனகை நாராயணப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி, கள்ளழகா் வேடம் தரித்து சுவாமி திங்கள்கிழமை வைகையாற்றில் இறங்கினாா். இதையொட்டி, சோழவந்தான், வாடிப்பட்டி உள்பட சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கானோா்
வைகையாற்றில் திரண்டனா். அப்போது, கூட்ட நெரிசல் ஏற்பட்டதில், இரு சிறுவா்கள் ஆற்றில் மூழ்கினா். அந்தப் பகுதியினா் இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.
அங்கு மருத்துவா்கள் பரிசோதித்ததில் ஒருவா் உயிரிழந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து சோழவந்தான் போலீஸாா் விசாரணை நடத்தியதில், உயிரிழந்தவா், விருதுநகா் மாவட்டம், காரியாபட்டியைச் சோ்ந்த சங்கா்குமாா் மகன் வசீகரன் (16) என்பதும், பிளஸ் 2 மாணவா் என்பதும், மற்றொருவா் சோழவந்தான் சோலைநகரைச் சோ்ந்த நாராயணன் மகன் அய்யனாா் (16) என்பதும் தெரிய வந்தது. இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.